மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த  ராஜேஸ் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளும் உள்ளனர். அவரது செல்போனுக்கு ஒருநாள் மிஸ்டு கால் வந்தது. அவரும் அந்த நம்பரை அழைத்து பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய பெண், தவறுதலாக அவரது செல்போன் நம்பருக்கு அழைப்பு விடுத்து விட்டதாக கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

அதன்பிறகு சில நாட்கள் கழித்து ராஜேஸ் மீண்டும் மிஸ்டுகால் நம்பருக்கு போன் செய்து அந்த பெண்ணிடம் நட்பாக பேசினார். அப்போது அவர் தனக்கு திருமணமான தகவலை கூறாமல் அவரிடம் பேசியுள்ளார்.

அந்த பெண்ணும் அதை நம்பி அவருடன் சகஜமாக பேசினார். அதன்பிறகு அவர்களது செல்போன் நட்பு தினமும் தொடர்ந்தது. அந்த பெண் தனது சொந்த ஊர் பணகுடி என்றும், தான் கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் உருக்கமாக கூறினார்.

அவருக்கு ஆறுதல் கூறுவது போல ராஜேசும்  பேசியதால் அந்த பெண் அவரிடம் தனது அந்தரங்க தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

நாளடைவில்  ராஜேஸ் அந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதால் அதை நம்பிய அந்த பெண் அவருடன் பேசி வந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணை நேரில் சந்தித்து பேச விரும்புவதாக கூறிய ராஜேஸ் , 2 பேரும் சந்திக்க வசதியாக காவல்கிணறுக்கு வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்தார்.


அவரது பேச்சை நம்பி அங்கு வந்த அந்த பெண்ணை அந்த பகுதியில் உள்ள ஒரு லாட்ஜிக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து அவரை திருமணம் செய்து கொள்வதாக ராஜேஸ் உறுதி அளித்தார்.

அதை நம்பிய அந்த பெண்ணுடன் அவர் உல்லாசமாக இருந்தார். அதன் பிறகு அவர்களது தனிமை சந்திப்பு பல நாட்களுக்கு நீடித்தது. இதையடுத்து ராஜேசின்  நடவடிக்கையில் அவரது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அடிக்கடி அவர் வெளியூருக்குச் சென்று விட்டு வருவதாக கூறி சென்றது அவரது சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. இதுபற்றி தனது உறவினர்களிடம் கூறி கணவரை கண்காணிக்கும் படி கேட்டார். அதன்படி உறவினர் ஒருவர் அவரை  கண்காணிக்க தொடங்கினார்.

அவர் வீட்டில் இருந்து வெளியேச் சென்று காவல்கிணறில் உள்ள லாட்ஜிக்கு செல்வதை அந்த உறவினர் பார்த்து விட்டார். மேலும் ஒரு பெண்ணும் அவரை பின்தொடர்ந்து லாட்ஜி அறைக்கு சென்றதை பார்த்த உறவினர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இந்த தகவலை போன் மூலம் ராஜேசின்  மனைவிக்கு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கணவரை தேடி ராஜேசின் மனைவி  லாட்ஜில் அறைக்குச் சென்றார். அவருடன் அவரது உறவினர்கள் சிலரும் திரண்டுச் சென்றனர்.

அவர்கள் லாட்ஜ் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற போது வாலிபரும், பணகுடி பெண்ணும் தனிமையில் உல்லாசமாக இருப்பது தெரிய வந்தது. இதில் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவருடன் தகராறு செய்து அவரை அடித்து உதைத்தார்.

இதைப்பார்த்ததும் அவரது கள்ளக்காதலி அங்கிருந்து ஓட முயன்றார். அவரையும் மனைவி மனைவி அடித்து உதைத்தார். உறவினர்களும் அவர்களை தாக்கியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் பணகுடி போலீசார் அங்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது போலீசாரிடம் அந்த பெண் கதறி அழுதார். வாலிபர் தனக்கு திருமணமானதை மறைத்து தன்னிடம் பழகியதாக கூறினார். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.