நெல்லை பாளை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த செய்யது அலி மகன் முகமது அசாருதீன் பாளை சாந்திநகர் பகுதியில் உள்ள ஒரு புரோட்டா கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் 10-ம் வகுப்பு மாணவி ரேகாவை, பரோட்டா மாஸ்டர் முகமது அசாருதீன் அடிக்கடி பின் தொடர்ந்து சென்று காதல் வசனம் பேசியுள்ளார்.

அதில் அந்த நபருக்கும், அந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை என்பதால், இருவரும் போனில் வாட்ஸ்-அப்பில்சாட் செய்து. இந்த நிலையில் நேற்று முகமது அசாருதீன் மாணவி ரேகாவை சினிமாவுக்கு போகலாமா? எனக் கேட்டுள்ளார்.

வீட்டில் பெற்றோர் வெளியே சென்றிருந்ததால், அந்த மாணவியும் சரி என்று சொல்லி விட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் நேற்று பிற்பகல் நெல்லையில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு சிவகார்திகேயன்  நடித்த மிஸ்டர் லோக்கல் படம் பார்க்க, தியேட்டரில் கூட்டம் இல்லாததால் அந்த மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார்.. இந்த நிலையில் வெளியே சென்றிருந்த அந்த மாணவியின் பெற்றோர் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் வீடு திரும்பினர்.

இந்நிலையில், வீட்டில் மாணவி ரேகா இல்லாததால்,  உறவினர்கள் வீடுகளிலும் மாணவியை தேடினர். மாலையில் மேட்னி ஷோ முடிந்து முகமது அசாருதீனுடன் அந்த மாணவி சாந்தி நகர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த மாணவியின் உறவினர்கள் அவர்களை பிடித்தனர்.

அப்போது மாணவி தன்னை சினிமாவுக்கு என்று அழைத்து சென்று தியேட்டரில் வைத்து செக்ஸ் சில்மி‌ஷம் செய்ததாக குடும்பத்தினரிடம் அழுதுகொண்டே தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் குடும்பத்தினர், வாலிபர் முகமது அசாருதீனை பிடித்து பாளை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சினிமாவுக்கு அழைத்து சென்று செக்ஸ் சில்மி‌ஷம் செய்ததாக போலீசில் மாணவி புகார் செய்தார். அதன் பேரில் பாளை மகளிர் போலீசார் ‘போக்சோ’ சட்டப்பிரிவில் வழக்குப்பதிந்து செய்து பரோட்டா மாஸ்டர் முகமது அசாருதீனை கைது செய்தனர்.