MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Parenting Tips : அடம் பிடிக்கும் குழந்தையை எப்படி மாற்றுவது? பெற்றோருக்கான சில டிப்ஸ் இதோ..

Parenting Tips : அடம் பிடிக்கும் குழந்தையை எப்படி மாற்றுவது? பெற்றோருக்கான சில டிப்ஸ் இதோ..

குழந்தையின் நடத்தையை மாற்ற உதவும் சில அடிப்படை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramya s
Published : Apr 20 2024, 04:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

குழந்தை வளர்ப்பு என்பது சவாலான விஷயம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை சிறந்த முறையில் கவனித்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள், சில சமயங்களில் கரிசனையும், அதீத பாசமும் குழந்தைகளை பேராசை கொண்டவர்களாகவும் தாங்கள் நினைத்ததை சாதிக்கும் குணம் கொண்டவராகவும் ஆக்கக்கூடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இதனால் உங்கள் குழந்தை தேவையில்லாத விஷயங்களைக் கேட்கக்கூடும். மேலும் குழந்தை எது கேட்டாலும் எந்த மறுப்பும் தெரிவிக்காமலும் உடனே வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். எனவே குழந்தைகள் எது வேண்டுமானாலும் அடம்பித்து கேட்க கற்றுக் கொள்கின்றனர்.

37

எனவே தங்கள் குழந்தையின் நடத்தையை எப்போது பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும். குழந்தையின் நடத்தையை மாற்ற உதவும் சில அடிப்படை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

47

தொடர்பு என்பது உறவின் திறவுகோல். உங்கள் குழந்தைகளை நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்க்க அனுமதிப்பதை விட அவர்களுடன் அமர்ந்து பேசுவது எப்போதும் சிறந்தது. உங்கள் குழந்தையின் தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் உள்ள வேறுபாட்டை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொலைகாட்சியில் வரும் விளம்பரங்கள்,அவர்களை தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டும் என்று தூண்டுகின்றன.

57

இது தொடர்பாக உங்கள் குழந்தைகளுடன் பேசவும், நீண்ட காலத்திற்கு டிவி பார்க்க அனுமதிக்க வேண்டாம் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது, மாறாக அவர்கள் புத்தகங்களைப் படிப்பது அல்லது சில வேலைகளில் உங்களுக்கு உதவுவது போன்ற மாற்றாக ஏதாவது செய்யலாம்.

67

பணம் மற்றும் கடின உழைப்பு பற்றி உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள், அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்குவது ஒவ்வொரு பெற்றோரின் பொறுப்பு ஆனால் அவர்களின் தேவையற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவது அல்ல. பெற்றோர்கள் அவர்களிடம் பணத்தைப் பற்றியும், வீட்டின் தேவைகளையும் உங்கள் குழந்தைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்ய நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பதைப் பற்றி பேச வேண்டும். இது பணத்தின் கருத்தையும், நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பதையும் புரிந்துகொள்ள உதவும்.

 

77

எப்பொழுதும் கேட்பதை விட மற்றவர்களுக்கு எதையாவது கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை பற்றி உங்கள் குழந்தைக்கு சொல்லிக்கொடுங்கள். உண்மையாக தேவைப்படும் ஒருவருக்குக் கொடுப்பதன் மூலம் மகிழ்ச்சியைப் பெறுவது எப்படி என்பதைப் பற்றி குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும், இது அவர்களின் பேராசையை மட்டுமல்ல, அவர்களின் பிடிவாதத்தையும் மாற்ற உதவும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
பெற்றோர் ஆலோசனை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved