Asianet News TamilAsianet News Tamil

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொடூர கொலை.. தூங்கிக்கொண்டிருந்த போது நடந்த அதிர்ச்சி சம்பவம்..

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Karnataka horror: Four family members brutally killed in their sleep Rya
Author
First Published Apr 19, 2024, 2:06 PM IST

கர்நாடக மாநிலம் கடக் நகரின் தசரா கல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திக் பகாலே (27), பரசுராம ஹதிமானி (55), அவரது மனைவி லட்சுமி ஹதிமானி (45), அவர்களது மகள் அகன்ஷா ஹதிமானி (16) ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அடையாளம் தெரியாத நபர்கள் சில இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து கொடூரமான கொலைகளை செய்துள்ளனர். வீட்டின் முதல் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஹதிமானி குடும்பத்தினர் கொடூரமாக தாக்கப்பட்டனர். திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக அங்கு வந்திருந்த கார்த்திக்கின் உறவினர்களும் இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி குத்திக் கொலை.. ஆத்திரத்தில் சக மாணவன் செய்த கொடூரம்..

இந்த தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது அவர்கள் மூன்று கத்திகள் வீட்டின் கொல்லைப்புறத்தில் வீசப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். வீட்டின் பின்புற வடிகாலில் ஒரு கத்தி மற்றும் ஒரு காலணி  தங்க வளையல்கள் ஆகியவை இருந்ததாக காவல்துறை கூறியுள்ளனர். எனினும் இந்த கொடூர செயலை அரங்கேற்றிய குற்றவாளிகள் தப்பி சென்றுவிட்டனர்.

கடக் காவல் கண்காணிப்பாளர் பி.எஸ்.நேமகவுடா, கூடுதல் எஸ்பி எம்பி சங்கா உள்ளிட்ட பல அதிகாரிகளுடன், சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார். விசாரணையில் உதவுவதற்காக மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன. போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

காதலனை நம்பி சென்ற பள்ளி மாணவி! வீட்டில் அடைத்து வைத்து நண்பருடன் செய்த காரியம்! விசாரணையில் பகீர் தகவல்!

இதனிடையே அமைச்சர் எச்.கே.பாட்டீல் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios