Asianet News TamilAsianet News Tamil

கொடியை கழட்ட சொன்ன பாஜகவினர்.. ஆபாசமாக திட்டிய அதிமுகவினர்.. கடும் மோதல்.. பல்லடத்தில் பரபரப்பு

பல்லடம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எம் எஸ் எம் ஆனந்தன் வந்த வாகனத்தில் அதிமுக கொடியை கழட்ட சொன்ன பாஜகவினரை அதிமுகவினர் ஆபாசமாக திட்டியதால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

First Published Apr 19, 2024, 10:26 PM IST | Last Updated Apr 19, 2024, 10:26 PM IST

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 417 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட 12ஆவது வார்டில் 103 வது வாக்குச்சாவடியில் ஆய்வு மேற்கொள்வதற்காக அதிமுகவை சேர்ந்த பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் எம் ஆனந்தன் வந்துள்ளார். அப்போது அவரது காரில் அதிமுகவின் கொடி கட்டப்பட்டிருந்ததாகவும், அதை அகற்ற சொன்ன பாஜகவினரை பல்லடம் எம்எல்ஏ உடன் வந்த அவரது ஆதரவாளர்கள் பாஜகவினரை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் அதிமுகவினருடன் படும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் 50க்கும் மேற்பட்ட போலீசார் அண்ணா நகர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த பிரச்சனை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Video Top Stories