கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டவன் திருவாரூர் முருகன். தப்பி சென்ற முருகன், சுரேஷ் உள்ளிட்ட கொள்ளை கும்பலை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக மணிகண்டன், சுரேஷின் தாய் கனகவள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து  நான்கே முக்கால் கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கைதான 2 பேரையும் வரும் 18-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தக் கொள்ளை வழக்கில் முருகனின் உறவினர்கள் 14 பேரை போலீசார் பிடித்து திருச்சிக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் முருகனின் அண்ணன் செல்வத்தின் மகன் முரளியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தலைமறைவாக உள்ள முருகன் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் பெரும் பகுதியை எடுத்து சென்று விட்டதாக கூறப்பட்டது. தனிப்படை போலீசார் முருகனை  தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் திருவாரூர் முருகன் சரண் அடைந்தான். நேற்று  திருவண்ணாமலை செங்கம் நீதிமன்றத்தில்  முருகனின் உறவினர் சீராத்தோப்பு சுரேஷ் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 திருச்சி நெ.1 டோல்கேட் அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த கொள்ளையிலும் முருகன் தலைமையிலான கும்பலே ஈடுபட்டு இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகித்துள்ளனர். கொள்ளையடிக்க செல்லும்போது முருகன் செல்போன் பயன்படுத்துவது இல்லை. லாட்ஜ்களில் தங்குவதும் இல்லை. காரிலேயே இருந்து கொண்டு அனைத்து காரியத்தையும் கச்சிதமாக முடித்து விடுவார். மேலும், தான் செல்லும் இடங்களுக்கு காரிலேயே சமையல் பாத்திரங்கள், சிறிய அடுப்பை எடுத்து சென்று ஆங்காங்கே சாலையோரம் காரை நிறுத்தி சமைத்து சாப்பிடுவாராம்.

மெலிந்த உடல் தேகத்துடன் பார்ப்பதற்கு பரிதாபத்துக்குரிய ஆளை போல் காட்சி அளிக்கும் முருகன், போலீசாருக்கே சவால் விடும் வகையில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதில் கைத்தேர்ந்தவராக இருந்துள்ளார்.  கொடூர நோயால் பாதிக்கப்பட்ட முருகன் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். தன்னுடைய கொள்ளை பாவத்துக்கு பரிகாரம் தேடும் வகையில் முருகன் 2 ஊனமுற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:- விஜய் ரசிகர்களை தவிர எல்லோருமே கேப்மாரிகள்தான்... கேப்மாரித்தனமாக பேசும் எஸ்.ஏ.சந்திரசேகர்..!

சினிமா தயாரிப்பாளராகவும் இருந்தபோது துணை நடிகைகளுடன் ஏற்பட்ட பழக்கத்தால் கொள்ளையன் முருகனுக்கு எய்ட்ஸ் நோய் பரவியதாக கூறப்படுகிறது. எய்ட்ஸ் நோயுடன் போராடியபடியே கொள்ளையன் முருகன் காவல்துறையினரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்துள்ளார். 

இதையும் படியுங்கள்:- 'அதிமுக அரசை தேவையில்லாமல் சீண்டாதீர்கள்...’ பிகிலால் திகிலடைந்து பல்டியடித்த விஜய் தரப்பு..!