மாங்கல்ய பூஜை செய்வதாக கூறி பண மோசடி செய்த இந்து மக்கள் கட்சி ஜோதிடர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தனது குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாங்கல்ய பூஜை செய்வதாக கூறி பண மோசடி செய்த இந்து மக்கள் கட்சி ஜோதிடர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தனது குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழைய வண்ணார் பேட்டையை சேர்ந்தவர் கருப்பையா. இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடம் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ளது. அந்த இடம் பிரச்சினையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே கருப்பையாவுக்கு கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த ஜோதிடரும், இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணைத் தலைவருமான பிரசன்னா அறிமுகமாகியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: மாங்கல்ய பூஜை செய்வதாக மோசடி.. தொழிலதிபரை ஏமாற்றிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி

கருப்பையாவின் பிரச்சனைகளை அறிந்த பிரசன்னா இடம் சம்பந்தபட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து தருவதாக கூறி கருப்பையாவிடம் இருந்து கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ரூ 25 லட்சத்து 50 ஆயிரம் பணம் பெற்றுள்ளார். மேலும் கருப்பையாவுக்கு மாங்கல்ய தோஷம் உள்ளது. எனவே மாங்கல்ய பூஜை செய்ய வேண்டும் என்று கூறி கருப்பையாவின் மனைவியின் 15 பவுன் தாலி சங்கிலியையும் பிரசன்னா வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இடப் பிரச்சினையை பிரசன்னா தீர்த்து வைக்காமல் மோசடி செய்துள்ளார்.

இதையும் படிங்க: கணவன் வேலைக்கு சென்றவுடன் மைத்துனருடன் உல்லாசம்.. 20 ஆயிரம் கொடுத்து புருஷனுக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி.

இதற்கு பிரசன்னாவின் மனைவி அஸ்வினி, ஆர்.எஸ் புரத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத், பிரகாஷ் என்ற ஐயரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து கருப்பையா செல்வபுரம் காவல்நிலையத்தில் அளித்த கொடுத்த புகாரின் பேரில் பிரசன்னா, அவரது மனைவி அஸ்வினி, ஹரி பிரசாத் பிரகாஷ் ஆகியோர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த நிலையில் பிரசன்னா தனது மனைவி, மகள் மற்றும் தாய் ஆகியோருடன் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதில் தாய் கிருஷ்ணகுமாரி உயிரிழந்து விட்ட நிலையில் மற்ற மூவருக்கும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.