Asianet News TamilAsianet News Tamil

மாங்கல்ய பூஜை செய்வதாக மோசடி.. தொழிலதிபரை ஏமாற்றிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி

இடப்பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி பண மோசடி செய்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Case registered against the Hindu makkal katchi executive cheated money
Author
First Published Aug 3, 2022, 8:03 PM IST

சென்னை பழைய வண்ணார் பேட்டையை சேர்ந்தவர் கருப்பையா. தொழிலதிபரான இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடம் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ளது. அந்த இடம் பிரச்சினையில் இருந்துள்ளது. 

Case registered against the Hindu makkal katchi executive cheated money

இந்த நிலையில் கருப்பையாவுக்கு கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த ஜோதிடரும், இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணைத் தலைவருமான பிரசன்னா, என்பவர் அறிமுகமாகிறார்.அவர் இடம் சம்பந்தபட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து தருவதாக கருப்பையாவிடம் கூறியுள்ளார். இதை நம்பிய கருப்பையா, பிரசன்னாவிடம் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ரூ 25 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..தேதி குறித்த நீதிமன்றம்.. அதிமுக பொதுக்குழு செல்லுமா ? பரபரப்பில் இபிஎஸ் Vs ஓபிஎஸ் !

உங்களுக்கு மாங்கல்ய தோஷம் உள்ளது. எனவே மாங்கல்ய பூஜை செய்ய வேண்டும் என்று கூறி கருப்பையாவின் மனைவியின் 15 பவுன் தாலி சங்கிலியையும் பிரசன்னா வாங்கியதாக கூறப்படுகிறது.  ஆனால் இடப் பிரச்சினையை பிரசன்னா தீர்த்து வைக்காமல் மோசடி செய்துள்ளார். இதற்கு பிரசன்னாவின் மனைவி அஸ்வினி, ஆர்.எஸ் புரத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத்,பிரகாஷ் என்ற ஐயரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

Case registered against the Hindu makkal katchi executive cheated money

இதுகுறித்து கருப்பையா நேற்று செல்வபுரம் காவல்நிலையத்தில் இது குறித்து கொடுத்த புகாரின்பேரில் பிரசன்னா, அவரது மனைவி அஸ்வினி, ஹரி பிரசாத் பிரகாஷ் ஆகியோர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..என் அக்கவுண்ட்ல 2,700 கோடியா.. செங்கல் சூலை தொழிலாளருக்கு அடிச்ச லக்.. கடைசியில் பாவம்யா ?

Follow Us:
Download App:
  • android
  • ios