கள்ளக்காதல் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் மரணதண்டனை விதிக்கும் சட்டம் வரும் 3ம் தேதி முதல் புரூனேயில் அமலுக்கு வருகிறது. 

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான புரூனேயில் கடுமையான சட்டதிட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இங்கு கள்ளக்காதலும், ஓரினச்சேர்க்கையும் கடும் குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த இரு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க அந்நாட்டு மன்னர் சட்டம் கொண்டு வந்தார்.

புரூனே நாட்டில் திருட்டை ஒழிக்கவும் தண்டனையை கடுமையாக்க சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி முதல் முறை திருடுகிற குற்றவாளிகளுக்கு வலது கையை வெட்டி விடுவார்கள். இரண்டாவது முறை அதே நபர் திருடினால் அவருக்கு இடது காலை வெட்டி விடுவார்கள். 

இந்நிலையில் கள்ளக்காதலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டம் வரும் 3-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான முறையான அறிவிப்பை அந்த நாட்டின் அட்டார்னி ஜெனரல் அலுவலகம் கடந்த டிசம்பர் மாதம் 29-ந் தேதி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இப்படி தகாத உறவு, ஓரினச்சேர்க்கை, திருட்டு ஆகிய 3 குற்றங்களுக்கும் தண்டனையை அதிகரிப்பது என கடந்த 2013-ம் ஆண்டு முடிவு எடுத்து உள்ளனர்.

ஆனாலும் வலது சாரி அமைப்புகளின் கடும் எதிர்ப்பினால், எப்படி நடைமுறைப்படுத்துவது என்று அதிகாரிகள் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டு வந்ததால் தாமதம் ஆகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.