சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவனை, சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

சூளைமேடு பகுதியை சேர்ந்த, அருண் என்கிற 23 வயது, கல்லூரி மாணவன் அதே பகுதியை சேர்ந்த 17 வயதே ஆகும் சிறுமியை, ஆசை வார்த்தைகள் கூறி அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டு கர்ப்பமாக்கியுள்ளார்.

சிறுமியிடம் மாற்றம் ஏற்படவே,  அவருடைய அம்மா, துருவி துருவி விசாரித்த போது, அருண் தகாத முறையில் நடந்து கொண்டதையும், அதனால் தான் கர்ப்பமாக உள்ளதையும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இந்த சம்பவம் குறித்து, திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் கல்லூரி மாணவன் அருணை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.