பெண்களுக்கு பாலியல் ரீதியாக ஆண்கள் தொல்லை கொடுத்தால், பல பெண்கள் பெரும்பாலும் ஒதுங்கி போய்விடுவார்கள். இதெல்லாம் ஒரு காலம். தற்போது பெண்கள் செக்ஸ் டார்ச்சர்  கொடுக்கும் ஆண்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்து விடுகின்றனர்.

மேலும் தற்போது மீ டு மூவ்மெண்ட் பெண்களுக்கு பெரிய சர்போர்ட்டாக இருப்பதால் பெண்கள் துயிந்து தங்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளை எதிர்த்து போராடுகிற்னர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் தாவன்கரே  மாவட்டத்தை சேர்ந்த இள்ம்பெண் ஒருவர் அப்பகுதியில் இருக்கும் டிஎஸ்எப்எல் கடன் நிறுவத்தில் ரூ.2 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். கடன் கோரி விண்ணப்பித்த இவரை வங்கி மேலாளர் தேவய்யா என்பவர் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். கடன் வேண்டுமெனில் தனது படுக்கை அறைக்கு வரவேண்டும் என அழைத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளம்பெண் நடுரோட்டிற்கு தேவய்யாவை இழுத்துவந்து உருட்டுக்கட்டையால் அடித்து வெளுத்து வாங்கிவிட்டார். . பொதுமக்கள் அனைவரது முன்னிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை வேடிக்கை பார்த்த  பொதுமக்கள் படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். தற்போது இணையத்தில் இது வைரலாகி வருகின்றது.