கோலிவுட் பிரபலங்கள் நடிகர் அதர்வா, அஜித் பட நடிகை சமீரா ரெட்டி என அடுத்தடுத்த பிரபலங்கள் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்க பட்டு வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு நடிகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அவ்வப்போது லேசான மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டு வருவதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வருகிற 25ம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே சுகாதாரத்துறையினர் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்: எம்.எஸ்.பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா - சுதாகருக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்த திருமண வரவேற்பு..! புகைப்பட தொகுப்பு..!
 

தமிழகத்தை தொடர்ந்து, மும்பை, மஹாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா போன்ற இடங்களிலும், கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. சாதாரண மக்களையும் கடந்து பல பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து, மக்கள் மிகவும் பாதிக்கப்பாகவும், வெளியே செல்லும் போது, காரோண முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துவருகிறார்கள்.

மேலும் செய்திகள்: என் முகம் இப்படி வீங்க தவறான சிகிச்சையே காரணம்... ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு ரைசா வில்சன் வக்கீல் நோட்டீஸ்...!
 

இந்நிலையில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ’வழக்கு எண் 18/9’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை மனிஷா யாதவ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முதல் படமே நல்ல அறிமுகத்தை கொடுத்தது. எனவே இந்த படத்தை தொடர்ந்து, அதன்பின் ’ஆதலால் காதல் செய்வீர்’ ’திரிஷா இல்லைனா நயன்தாரா’ ’சென்னை 28 பாகம்-2’ 'குப்பை கதை' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். 

மேலும் செய்திகள்: அஜித்துடன் எடுத்த ஒற்றை வீடியோ... வாழ்க்கை வெறுத்து, தற்கொலை முயற்சி வரை சென்ற பெண்!
 

பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும், தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து... தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில்... இது குறித்து மனிஷா யாதவ் தனது சமூக வலைதளப் பதிவில் "தனக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. ஆனால் விரைவில் மீண்டு நலம் பெற்றுவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. உடல்நிலையில் மோசமான விளைவு இல்லை என்றாலும் அவ்வப்போது லேசாக மூச்சு திணறலால் அவதி பட்டு வருகிறேன். கொரோனாவில் இருந்து மொத்தமாக தாண்டி வருவதே நல்லது என்று தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் விரைவில் கொரோனாவில் இருந்து குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.