அஜித்தை வீடியோ எடுத்த விவகாரத்தால், தன்னுடைய வேலையை இழந்து, மன உளைச்சல் காரணமாக, தற்கொலை முயற்சி வரை சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தல அஜித்துக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே மவுசு கொஞ்சம் அதிகம் தான். எனவே அவர் எது செய்தாலும் அதனை ரசிகர்கள் வைரல் ஆகி விடுகிறார்கள். அந்த வகையில், அஜீத் சமீபத்தில் ஓட்டு போட வந்த போது... அவரை எரிச்சலூட்டும் வகையில் ரசிகர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுக்க முயன்ற போது பொறுமை இழந்த அஜித், அந்த செல்போனை பிடுங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் அஜித் அந்த ரசிகர்களிடம் செல் போனை ஒப்படைத்த சில புகைப்படங்களும் வெளியானது. இந்நிலையில் தன்னுடைய, ஆர்வக்கோளாறு காரணமாக ரசிகை ஒருவர் செய்த செயல் அவரை தற்கொலை வரை கொண்டு சென்றுள்ளது.

29  வயதாகும் பர்ஜானா என்ற பெண் அஜித்தின் தீவிர ரசிகை. இவர் பிரபல தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான ஒருங்கிணைப்பாளராக சில ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நேரத்தில், அஜித் எதேர்சையாக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அதைக் கண்டதும் உற்சாகமடைந்த பர்ஜானா அவருடன் வீடியோ எடுத்துக் கொண்டுள்ளார்.  பின்னர் இவரது செல்போனை பாதுகாப்பு அதிகாரிகள் பிடுங்கிக் கொண்டதாக தெரிகிறது.  பின்னர் பர்ஜானா விடம் செல்போனை அவர்கள் கொடுத்து விட்ட போதிலும் அந்த வீடியோ வெளியே கசிந்தது.

எனவே அஜித் கொரோனா பரிசோதனை செய்துகொண்டாரா? என்ற கேள்விகளுடன் அஜித்தின் பரிசோதனை வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.  இதனால் தவறான தகவலை வீடியோவாக எடுத்து வெளியிட்ட பர்ஜானாவை மருத்துவமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. பின்னர் அஜீத் மனைவி ஷாலினி வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் அவரை மருத்துவமனை பணியில் அமர்த்தியதாக கூறப்படுகிறது. எனினும் எந்த ஒரு வேலையும் செய்யாமல் அவரை அலைக்கழித்த பின் பணியிடை நீக்கம் செய்துள்ளது. பர்ஜானா பணியிடம் நீக்கம், அஜித் விவகாரத்திற்க்காக செய்யப்படவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறினாலும், இதுவும் ஒரு காரணம் தான் என பர்ஜானா கூறுகிறார்.

இதன் காரணமாக கடந்த வயதான தாய் மற்றும், குடும்பத்தினரை  கவனிக்க முடியாமலும் இருந்துள்ளார். நடிகர் அஜித்தை தொடர்பு கொண்டு நடந்து தகவல்களை தெரிவிக்கலாம் என்று அவரது மேலாளர் சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்டபோது, அவர் அஜித்திடம் பேசி உதவுவதாக கூறி பின்னர் முடியாது என மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பர்ஜானா தற்கொலைக்கு முயன்றதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் பர்ஜானா கொடுத்த புகாரின் அடிப்படையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மீது வளசரவாக்கம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அஜித் மீது கொண்ட தீவிர அன்பு காரணமாக அந்த வீடியோவை எடுத்து தன்னுடைய வாழ்க்கையே பாதித்துள்ளது கண்கலங்கி கூறியுள்ளார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.