இப்போதைக்கு சோசியல் மீடியாவின் ஹாட் டாப்பிக்கே பிக்பாஸ் பிரபலம் வனிதா, பீட்டர் பாலை 3வது திருமணம் செய்து கொண்டது தான். கடந்த 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை வனிதா 3வது முறையாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதற்கு காரணம் ஏற்கனவே திருமணமான பீட்டர் பால் முதல் மனைவி மற்றும் பிள்ளைகளை தவிக்கவிட்டு வந்துவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தான்.

7 ஆண்டுகளாக முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்த பீட்டர் பால் திடீர் என  வனிதாவை திருமணம் செய்து கொள்ள பிள்ளைகளை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது, என் புருஷன் எனக்கு வேணும் என சண்டையிட ஆரம்பித்துள்ளார் ஹெலன் எலிசபெத். இதற்கிடையே ஹெலனுக்கு சப்போர்டாக திரைப்பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அவர்களில் தயாரிப்பாளர் ரவீந்தரும் ஒருவர். 

ஆன்லைன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரவீந்தர், வனிதா திருமணம் செய்தது தவறு இல்லை. முறையாக விவாகரத்து பெறாத நபரை திருமணம் செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார். முதலில் அனைத்து பேட்டிகளிலும் திருமணம் எனக்கூறிவிட்டு, பிரச்சனையானதும் இல்ல இல்ல இதுவெறும் நிச்சயதார்த்தம் தான் என சொல்லிவிட்டு, லவ் ஆப் ஷேரிங் என முத்தமிட்டுக்கொண்டதை பார்த்தால் ஒரிஜினல் மனைவிக்கு எப்படி வயிறெரிச்சலாக இருக்கும் என கடும் விமர்சனங்களை முன்வைத்தார். 

 

இதையும் படிங்க: 14 வயதிலேயே தன்னை அறியாமல் தாறுமாறாக உருவெடுக்கும் அனிகா... கேரள உடையில் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

ரவீந்தரின் இந்த பேட்டியை பார்த்த வனிதா விஜயகுமார் கொந்தளித்து போயுள்ளார். என் சொந்த விஷயத்தில் தலையிட நீ யார்?. 3வது கல்யாணம் செஞ்சிக்கிறது, சோசியல் மீடியாவில் போட்டோ ஷேர் பண்றது எல்லாம் என் சொந்த விஷயம். அதில் தலையிட நீ யாரு. பீட்டர் பால் மனைவி ஹெலனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம். ஏன் நீங்க எந்த தொடர்பும் இல்லாமல் இந்த விஷயத்தில் கருத்து சொல்லுறீங்க. நான் ஒரு பிரபலமான நடிகை, 40 வருஷங்களாக எல்லாருக்கும் தெரிந்த விஜயகுமார் - மஞ்சுளா மகள் அதனால் என்னை வைத்து பப்ளிசிட்டி தேடப்பாக்குறார். உங்க மூஞ்சிக்கும் உடம்புக்கு உங்களை எல்லாம் யாருக்கு தெரியும். இதற்கு பதிலடி கொடுத்த ரவீந்தர் நான் வனிதாவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன். தொடர்ந்து பீட்டர் பால் முதல் மனைவிக்கு ஆதரவு குரல் கொடுப்பேன் என கொந்தளித்தார். 

 

இந்நிலையில் மீண்டும் ஆன்லைன் பேட்டி ஒன்றை கொடுத்துள்ள ரவீந்தர், வனிதா - பீட்டர் பாலுக்கு எதிராக ஆவேசமாக கருத்துக்களை முன்வைத்துள்ளார். விவாகரத்து வாங்காத நபரை முதல் திருமணம் செய்தது ஏன் என்ற கேள்வியை தான் நான் கேட்டேன். அதற்கு வனிதா நீ எல்லாம் ஒரு ஆம்பளையா?, எதுக்கு சாப்பிடுற, உன் உடம்பையும், மூஞ்சியையும் பாரு என தேவையில்லாமல் தரக்குறைவாக என்னை விமர்சித்தார். அதனால் தான் நான் விமர்சிக்க ஆரம்பித்தேன். பீட்டர் பால் மகனின் வாழ்க்கை என்ன ஆகும் என்ற கவலை எனக்குள்ளது. பீட்டர் பால் முதல் மனைவியை கேள்வி கேட்க வனிதாவிற்கு உரிமை இருந்தால், அவரை விமர்சிக்க எனக்கு உரிமை உள்ளது. 

இதையும் படிங்க: அமிதாப் பச்சன் குடும்பத்தை சுற்றி வளைத்த கொரோனா... மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யாவிற்கும் தொற்று உறுதி

விவகாரத்து வாங்காமல் அவர் பீட்டர் பாலுடன் வனிதா வாழ்வதே சட்டத்திற்கு எதிரான விஷயம். என்னை பற்றி பேசினால் அமைதியாக இருக்க, நான் ஒன்னும் அவங்க வீட்டு பீட்டர் பால் இல்ல., அப்படி ஒருத்தர் எங்க வீட்டுல இருந்தா அடிச்சு துவம்சம் பண்ணிடுவேன்'. ஏன் கேமரா முன்னாடி கிஸ் அடிக்க மட்டும் தான் பீட்டர் பால் வருவாரா?, கேள்விகளுக்கு பதில் சொல்ல எல்லாம் வரமாட்டாரா? என சகட்டுமேனிக்கு வனிதாவையும், பீட்டர் பாலையும் தரமாக விமர்சித்துள்ளார்.