பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஞாயிற்றுகிழமை மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதே ஆன சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பாலிவுட்டில் மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்படும் நிலையில், இதுவரை அவருடைய வீட்டில் இருந்து கடிதம் ஏதும் கைப்பற்றப்படாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

இந்நிலையில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் சுஷாந்திற்கு தொழில் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், 6 மாதத்தில் சுஷாந்த் கைவசம் இருந்த 7 படங்களும் கைநழுவிச் சென்றதாகவும் அடுத்தடுத்து பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் சுஷாந்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் பாலிவுட் பிரபலங்களை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். மன அழுத்தத்தில் இருந்த போது கண்டுகொள்ளாமல் விட்டு, விட்டு இப்போது “என்னிடம் பேசியிருக்கலாமே”, “உன்னை தனிமையில் விட்டுவிட்டோமே” என சீன் போடும்  பலரையும் வெளுத்து வாங்குகின்றனர். அந்த லிஸ்டில் தற்போது புதிதாக சேர்ந்திருக்கிறார் நடிகை கிரண். 

 

இதையும் படிங்க:  மூன்றாவது திருமணத்தை அறிவித்த பிக்பாஸ் வனிதா... அவருடைய மகளின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த கிரண், தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான "ஆம்பள" படத்தில் அம்மா நடிகையாக ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு ஹீரோயின்களின் அம்மா, ஹீரோக்களின் அண்ணி, அக்கா கேரக்டர்களின் நடிக்கு வாய்ப்புகள் மட்டுமே வரிசை கட்டி வந்தது. அப்படி வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்க மறுக்கும்  கிரண், தரமான கதை மற்றும், வெயிட் கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறார். என்ன ஆனாலும் சரி செகண்ட் இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பித்தே தீருவேன் என்ற முடிவில் உள்ளார். எப்படியாவது மீண்டும் ஹீரோயினாக வேண்டும் என்ற எண்ணத்தில் 39 வயதிலும் தாறுமாறு கவர்ச்சி காட்டி வருகிறார். 

சோசியல் மீடியாவில் தினமும் தனது ஹாட் போட்டோஸை பதிவேற்றி வரும் கிரண். அது எல்லாம் போதாது என்று மறைந்த நடிகர் சுஷாந்திற்கு இரங்கல் செலுத்துகிறேன் என்ற பெயரில் செய்த காரியம் நெட்டிசன்களை கடுப்பாகியுள்ளது. சுஷாந்த் வீடியோவை பார்த்து கண்ணீர் விட்டு கதறுவது போல் கிரண் டிக்-டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுவும் வழக்கம் போல படுமோசமான கவர்ச்சி உடையில், துக்கலான மேக்கப்புடன் வீடியோ வெளியிட்டிருக்கிறார். சுஷாந்தின் அஸ்தியை கூட கரைத்து முடித்துவிட்டார்கள் இப்போது ஃபீல் பண்ணி கிரண் வெளியிட்ட வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “நீங்கள் என்ன பாகிஸ்தானியரா?, இல்லை சீனாவைச் சேர்ந்தவரா? நாட்டில் என்ன பிரச்சனை நடக்கிறது என்று கூட தெரியாமல் டிக்-டாக்கில் ஜாலியாக விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்” என சகட்டு மேனிக்கு திட்டியுள்ளனர். 

இதையும்  படிங்க: சூப்பர் ஸ்டாரையும் விட்டு வைக்காத கொரோனா.... ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி...!

லடாக்கில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்த சோகத்தில் நாடே மூழ்கியுள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் கிரண் செய்த இந்த காரியம் தான் குவியும் கமெண்ட்களுக்கு காரணம்... அதை நீங்களே பாருங்கள்...