சூப்பர் ஸ்டாரையும் விட்டு வைக்காத கொரோனா.... ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி...!

இந்நிலையில் கடந்த மே மாதம் சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. 

Due to corona pandemic Rajinikanth Annaatthe Movie Release Postpond Again

''தர்பார்'' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ''அண்ணாத்த''. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிப்பதாகவும், வில்லியாக குஷ்புவும், வக்கீலாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. "அண்ணாத்த" என்ற தலைப்புக்கு ஏற்ற மாதிரி அண்ணன் - தங்கை சென்டிமெண்ட் செம்ம எவியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். 

Due to corona pandemic Rajinikanth Annaatthe Movie Release Postpond Again

 

இதையும் படிங்க: 39 வயசில் இது தேவையா?... ஓவராக கவர்ச்சி காட்டிய கிரணை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

இந்த படத்தில் முதல் இரண்டு கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நிறைவடைந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக கொல்கத்தா அல்லது புனே போகலாம் என படக்குழு திட்டமிட்டிருந்தனர். ஆனால் உலகம் முழுவதையும் உச்சகட்ட அச்சத்தில் வைத்துள்ள கொரோனா பீதி, இந்தியாவின் வடமாநிலங்களை விட்டுவைக்கவில்லை. அதனால் மூன்றாம் கட்ட ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

Due to corona pandemic Rajinikanth Annaatthe Movie Release Postpond Again

 

இதையும் படிங்க: “போங்கடா கிறுக்கு கதாநாயகனுங்களா?”... பாலிவுட்டின் டாப் ஸ்டார்களை ஓபன் மேடையில் திட்டிய மாதவன்..வைரல் வீடியோ!

தற்போது விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனா நிலையை பார்த்தால் மீண்டும் படப்பிடிப்புகள் என்று ஆரம்பிக்கப்படும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கிட்டத்தட்ட 70 நாட்களுக்கும் மேலாக திரைத்துறை முடங்கியுள்ள நிலையில் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை மட்டும் நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சமீபத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ளவும்  அனுமதி வழங்கப்பட்டது.

Due to corona pandemic Rajinikanth Annaatthe Movie Release Postpond Again

 

இதையும் படிங்க:  “இதை செய்தாலே கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்”... முதலமைச்சருக்கு இயக்குநர் சேரன் வைத்த அதிரடி கோரிக்கை...!

இந்நிலையில் கடந்த மே மாதம் சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது. ஆனால் கொரோனா பிரச்சனை எப்போது முடியும் என தெரியவில்லை. அதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடித்து பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய முடியுமா? என்பது தெரியவில்லை. இதனால் அண்ணாத்த படத்தின் ரிலீஸை அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்திற்கு தள்ளிவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios