- Home
- Cinema
- Mrunal Thakur : மீண்டும் காதல் சர்ச்சையில் மிருணாள் தாக்கூர்.... தன்னைவிட 9 வயது இளம் கிரிக்கெட் வீரருடன் காதலா?
Mrunal Thakur : மீண்டும் காதல் சர்ச்சையில் மிருணாள் தாக்கூர்.... தன்னைவிட 9 வயது இளம் கிரிக்கெட் வீரருடன் காதலா?
Mrunal Thakur New Love Controversy : நடிகை மிருணாள் தாக்கூர் அண்மையில் தனுஷ் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய நிலையில், தற்போது கிரிக்கெட் வீரர் ஒருவருடன் அவர் டேட்டிங் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

Mrunal Thakur New Love Controversy
இந்தியாவில் சினிமாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் ஒரு பெரிய கனெக்ஷன் இருக்கு. நடிகைகளும் கிரிக்கெட் வீரர்களும் காதலிப்பது, கல்யாணம் பண்ணிக்கொள்வது எல்லாம் ஷர்மிளா டாகூர்-பட்டோடி காலத்தில் இருந்து இப்போ இருக்கிற விராட் கோலி-அனுஷ்கா சர்மா வரைக்கும் தொடர்ந்துட்டே இருக்கு. இப்போ இந்த லிஸ்ட்ல புதுசா ஒரு ஜோடியோட பெயர் பயங்கரமா அடிபடுது. அதுதான் 'சீதா ராமம்' புகழ் மிருணாள் தாக்கூரும், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஸ்டார் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும்!
Mrunal Thakur : வசீகரிக்கும் தோரணையில் மிருணாள் தாகூர்.. மனதை திருடும் போட்டோஸ்
பாந்த்ரா கஃபேயில் நடந்தது என்ன?
மும்பையில் உள்ள பாந்த்ரா வெஸ்ட் பகுதியில் இருக்கும் 'பூஜீ கஃபே' இப்போ சோஷியல் மீடியாவில் சென்சேஷன் ஆகியிருக்கு. காரணம், அந்த கஃபேக்கு வெளியே எடுக்கப்பட்ட ஒரு சின்ன வீடியோதான். அந்த வீடியோவில், இளம் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கஃபேயில் இருந்து வெளியே வர்றார். அதே சமயம், நடிகை மிருணாள் தாக்கூர் கஃபேக்கு உள்ளே இருப்பது தெரியுது. ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருந்ததை பார்த்த நெட்டிசன்கள், "இங்க என்னமோ நடக்குது பாஸ்!" என பேச ஆரம்பிச்சுட்டாங்க.
வயசு வித்தியாசம் என்ன?
இந்த விஷயம் பரவ ஆரம்பிச்சதும், நெட்டிசன்கள் ரெண்டு பேரோட வயசையும் கணக்கு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. மிருணாள் தாக்கூருக்கு இப்போ 33 வயசு. யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கோ வெறும் 24 வயசுதான். இந்த 9 வருஷ வயசு வித்தியாசத்தை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டாலும், "காதலுக்கு வயசெல்லாம் ஒரு தடையே இல்லை" என ஒரு தரப்பு சப்போர்ட் பண்ணுது. இன்னொரு பக்கம், "இது சும்மா எதார்த்தமா நடந்திருக்கலாம்" என்றும் சிலர் சொல்றாங்க.
சோஷியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ
வைரலான வீடியோவில் ரெண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து பேசுற மாதிரியோ, காபி குடிக்கிற மாதிரியோ எந்த காட்சியும் இல்லை. ஜெய்ஸ்வால் சீரியஸா வெளியே வர்றார், மிருணாள் உள்ளே இருக்காங்க. ஆனாலும், "ரெண்டு பேரும் எதுக்கு ஒரே கஃபேக்கு போனாங்க? சீக்ரெட்டா மீட் பண்ணாங்களா?" என கேள்விகளால் சோஷியல் மீடியாவையே துளைத்தெடுக்கிறாங்க நெட்டிசன்கள். இதுக்கு முன்னாடி, மிருணாள் பெயர் தமிழ் நடிகர் தனுஷுடன் சேர்த்து பேசப்பட்டது. ஆனா, இப்போ ஜெய்ஸ்வால் பெயர் வந்ததும் அந்த பழைய நியூஸ் எல்லாம் காணாம போயிடுச்சு.
மிருணாள் - யஷஸ்வி மௌனம் ஏன்?
இந்த வைரல் வீடியோ மற்றும் பரவி வரும் வதந்திகள் பற்றி மிருணாளோ, யஷஸ்வியோ இதுவரைக்கும் எந்த பதிலும் சொல்லலை. பிரபலங்கள் பொது இடத்தில் தென்படும்போது இப்படிப்பட்ட செய்திகள் வருவது சகஜம்தான். ஒருவேளை, ரெண்டு பேரும் நண்பர்களாக இருக்கலாம் அல்லது வேலை விஷயமாக அங்கே சந்தித்து இருக்கலாம். ஆனா, ஃபேன்ஸ் இப்போதே இவங்களுக்கு ஒரு ஜோடிப் பெயர் வைத்து, "நியூ கப்பிள்" என கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். மொத்தத்தில், இந்த பாலிவுட் அழகிக்கும், கிரிக்கெட் உலகின் 'யஷஸ்வி' (வெற்றியாளன்) பையனுக்கும் இடையே நிஜமாவே ஏதாவது இருக்கா? இல்லை இது வெறும் சோஷியல் மீடியா கிளப்பிவிட்ட புயலா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும். அதுவரைக்கும் இந்த 'காபி டேட்' கதைதான் ஹாட் டாபிக்கா இருக்கும்!
டிசைனர் சாரியில்.. மஹாராணி போல மின்னும் மிருனால் தாக்கூர் - கூல் பிக்ஸ் இதோ!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

