மிருணாள் தாகூர் திருமணம் - ஆசையை சொன்ன தயாரிப்பாளர்! வெட்கத்தில் முகம் சிவந்த நடிகை!
Mrunal Thakur Marriage: நடிகை மிருணாள் தாகூர் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளார். இவரின் திருமணம் பற்றி நடிகர் ஒருவர் பேச, அதை முகம் சிவந்து ரசித்துள்ளார். இது குறித்த முழுமையான தகவல்களை பார்ப்போம்.

காதல் வதந்திகள்:
மிருணாள் தாகூரை பற்றி அடிக்கடி காதல் கிசுகிசுக்கள் கசிந்து வருகிறது. அதிலும் கடந்த ஆண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்த பின்னர், தனுஷ் மிருணாளுடன் தான் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் பரவின. பின்னர் இருவருமே இந்த தகவலை மறுத்ததாக கூறப்பட்டது.
கவனம் பெற்ற மிருணாள்:
தன்னை பற்றி எப்படி பட்ட வதந்திகள் வெளியானாலும் அதை சற்றும் கண்டுகொள்ளாத மிருணாள் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ‘டக்காய்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் வெற்றி நிகழ்ச்சியில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளரின் கருத்து :
அந்த நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் , “மிருணாள் தாகூர் ஒரு திறமையான நடிகை. அவர் தெலுங்கு நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், இங்கேயே இருந்து பல படங்களில் நடிக்க வேண்டும் என்று தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூறினார்.
வெட்கப்பட்ட மிருணாள்:
இந்த கருத்தை கேட்ட மிருணாள் தாகூர், முகம் சிவக்க வெட்கப்பட்டுக் கொண்டே சிரித்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் இதை அதிகமாக பகிர்ந்து தங்களின் லைக்குகளையும் குவித்து வருகிறார்கள்.
இயக்குநர் பாராட்டு:
மேலும், இயக்குநர் நாக் அஸ்வின் , மிருணாளின் நடிப்பை பாராட்டியதுடன், பழம்பெரும் நடிகை மதுபாலா நடிப்புடன் ஒப்பிட்டார். கதை தேர்வில் கவனம் செலுத்தும் சிறந்த நடிகை மிருணாள் என்றும் சுட்டிக்காட்டி பேசினார். மிருணாள் தாக்கூர் நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் போன்ற மெகா ஸ்டார்ஸ் நடித்த 'கல்கி' திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.