தளபதி விஜய்க்கு ஜோடியாக, கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான, சந்திரா லேகா என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், நடிகை வனிதா விஜயகுமார்.ஒரு சில படங்கள் மட்டுமே நடித்த வனிதா, பின் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு முழுமையாக விலகினார். பிரபல தொழிலதிபரும், நடிகருமான ஆகாஷை திருமணம் செய்து கொண்ட இவர், ஒரு சில வருடங்களிலேயே கணவரை விட்டு பிரிந்தார். இதை தொடர்ந்து ஆனந்த் ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டு, குழந்தைகள் ஒரு மகள் பிறந்த பின் அவரை விட்டும் பிரிந்தார்.

இந்நிலையில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலை காட்ட துவங்கிய இவர், கடந்த வருடம் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வனிதாவின் ஒரே மைனஸ் என்றால், தேவை இல்லாத விஷயத்திற்கு அதிக அளவில் குரலை உயர்த்துவதும், அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைத்து, சிறு பிரச்னையை கூட தெரிதாக்கி விடுவதும் தான் இருந்தால் மக்களிடம் குறைவான வாக்குகளை பெற்று இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

 

இதையும் படிங்க: “இதை செய்தாலே கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்”... முதலமைச்சருக்கு இயக்குநர் சேரன் வைத்த அதிரடி கோரிக்கை...!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும், ஒரு சில படங்களில் கமிட் ஆகி இருந்த வனிதா, மீண்டும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னராக வெற்றிவாகை சூடினார். இந்த லாக்டவுன் நேரத்தில் யூ டியூப் சேனல் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். பிரபல இணைய தள ஊடகம் ஒன்றின் மூலம் தன்னுடைய திருமணத்தை வனிதா உறுதி செய்துள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ள உள்ளவர் பற்றிய தகவலையும் வெளியிட்டுள்ளார். 

 

வனிதாவை திருமணம் செய்து கொள்ள போகும் நபர் பெயர் பீட்டர் பால் என்றும், அவர் ஒரு பிலிம் மேக்கர் என தெரிவித்துள்ளார். தற்போது பெரிய ப்ரொஜெக்ட்டில் வேலை செய்து வருவதாகவும், அந்த ப்ரொஜெக்ட்டில் தானும் ஒரு அங்கமாக இருப்பதாக வனிதா தெரிவித்துள்ளார். தன்னுடைய யூ டியூப் சேனல் துவங்க நிறைய உதவிகள் செய்துள்ளார். பாலிவுட், ஹாலிவுட், என வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே இவர்களுடைய திருமண பத்திரிக்கை நேற்று வெளியாகி வைரலான நிலையில், தற்போது வனிதா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படும் இவருடைய வருங்கால 3வது கணவர் புகைப்படம் என்று ஒரு புகைப்படம் வலைத்தளத்தில் தீயாக வட்டமிட்டு வருகிறது. 

 

இதையும் படிங்க:  சூப்பர் ஸ்டாரையும் விட்டு வைக்காத கொரோனா.... ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி...!

இந்நிலையில் தனது அம்மாவின் திருமணம் குறித்து வனிதாவின் மகள் தெரிவித்துள்ள கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என உங்களுக்கே தெரியும். என்ன நடந்தாலும் நான் உங்களை ஆதரிப்பேன். நான் உங்களிடம் இருந்து தான் அனைத்தையும் கற்றுக்கொண்டேன்.உங்களுடன் இருக்கும் இந்த 15 வருடங்கள் மிகவும் சிறப்பானது.உங்களுடைய வாழ்க்கையை உங்களுக்கு பிடித்த படி வாழ்கிறீர்கள். அதில் எந்த தவறும் இல்லை. உங்களிடம் இருக்கும் மகிழ்ச்சிக்கு நீங்கள் தகுதியானவர். நான் இதை மகளாகவும் தோழியாகவும் கூறுகிறேன் வாழ்த்துக்கள் மா என்று பதிவிட்டுள்ளார்.