நடிகைகள் கவர்ச்சியான உடைகள் அணிவது வழக்கமான ஒன்று தான். ஆனால் நடிகைகளுக்கு போட்டியாக, நடிகைகளின் அம்மாக்களும் இப்படி  உடை அணிய துவங்கி விட்டனர். அவர் வேறு யாரும் இல்லை நடிகை யாஷிகாவின் அம்மா தான். இவர் கவர்ச்சி உடையில் எடுத்த போட்டோ வெளியாகியு ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் கிளமெர் பேய்யாக நடித்து பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானவர் நடிகை யாஷிகா. இந்த படத்திற்கு பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் , இவர் ஓவராக நடிகை ஐஸ்வர்யாவுக்கு சப்போர்ட் செய்ததால்... மக்களிடம் ஆதரவு குறைந்து வெளியேற்றப்பட்டார். 

தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும், நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருக்கிறார். இதே நிகழ்ச்சியில் இவர் காதலிப்பதாக கூறப்பட்ட மகத்தும் நடுவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நடிகை யாஷிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரதுஅம்மாவின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், யாஷிகாவின் அம்மா சோனால் மிகவும் குட்டையான ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டவாறு தனது மகள் யாஷிகாவின் ஷூவை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

இதனை கண்ட ரசிகர்கள், உங்க மகள் வயதுக்கு கவர்ச்சி காட்டலாம். நீங்கள் இப்படி செய்வது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா என கலாய்த்து வருகிறார்கள்.