பிக்பாஸ் சீசன் 2 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் நெருங்கிய தோழியாக மாறியவர் முரட்டு குத்து நடிகை யாஷிகா ஆனந்த்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ஐஸ்வர்யா தத்தா, சமூக வலைத்தளத்தில், மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டார். 

இவரை தொடர்ந்து தற்போது அவருக்கு போட்டியாக தானோ என்னவோ? முரட்டு குத்து நடிகை யாஷிகா ஆனந்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கெளதம் கார்த்தியுடன்,  யாஷிகா ஆனந்த் நடித்து வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் வெற்றி பெற்றாலும், இரட்டை அர்த்தம் வசனங்கள் மற்றும் ஓவர் கவர்ச்சி காட்டி நடித்திருந்ததால் பலராலும் விமர்சிக்க பட்ட படமாக இருந்தது.

 

இதனால் தற்போது இனி நடிக்க உள்ள படங்களை மிகவும் தெளிவாக தேர்வு செய்து யாஷிகா நடிப்பார் என கூறப்பட்ட நிலையில்,   திடீர் என இப்படி ஓவர் கவர்ச்சி காட்டுவது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்