Asianet News Tamil

“வனிதாவை பச்சை பச்சையாக கிழிக்க காரணம் இதுதான்”... போலீசை கண்டும் அஞ்சாத சூர்யா தேவியின் அடுத்த வீடியோ...!

அதில் சூர்யா தேவி தன்னைப் பற்றியும், தனது திருமணம் குறித்து அவதூறாக பேசிவருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார். 
 

Why i slams bigboss fame Vanitha again and again Surya devi new video
Author
Chennai, First Published Jul 8, 2020, 6:17 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற வனிதா விஜயகுமார், சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. கடந்த 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை வனிதா 3வது முறையாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னரே பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து பிள்ளைகள் இருப்பது வெளியே வந்தது. 

 

இதையும் படிங்க: நம்ம சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது?.... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அழகில் மெருகேறிய போட்டோஸ்...!

கடந்த வாரம் முழுவதும் யூ-டியூப்பில் பீட்டர் பாலின் முதல் மனைவியான ஹெலனும், தற்போதைய மனைவியான வனிதாவும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறிவந்தனர். அந்த பஞ்சாயத்து எல்லாம் கொஞ்சம் தணிந்து, அவர்களே சட்டப்படி பிரச்சனையை சந்திக்கலாம் என சென்றுவிட்டனர். ஆனால் ஹெலனுக்கு சப்போர்ட் செய்வதாக கூறி வனிதாவிற்கு அட்வைஸ் செய்த லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி, தயாரிப்பாளர் ரவீந்தர் என பலரும் வனிதாவிடம் வாங்கி கட்டிக்கொண்டனர். 

இப்போது புதிதாக அந்த வரிசையில் சேர்ந்திருப்பது சூர்யா தேவி என்ற பெண், இவர் தேவையில்லாமல் வனிதாவின் 3வது திருமணம் குறித்து யூ-டியூப்பில் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். வனிதா, பீட்டர் பால், வக்கீல் ஸ்ரீதர் என அனைவரை பற்றியும் மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார். ஏற்கனவே தனது 3வது திருமணம் குறித்து அவதூறாக பேசுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வனிதா விஜயகுமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

 

இதையும் படிங்க: இளையராஜா மகனுக்கே இப்படியொரு நிலையா?... மதமாற்றம் வரை யுவனை தள்ளியது இதுதானாம்...!

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக சூர்யா தேவி மீது வனிதா விஜயகுமார் புகார் அளித்துள்ளார். வக்கீலுடன் போரூர் எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலையத்தில் வனிதா புகார் கொடுத்துள்ளார். அதில் சூர்யா தேவி தன்னைப் பற்றியும், தனது திருமணம் குறித்து அவதூறாக பேசிவருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார். 

வனிதா திருமணம் செய்து கொள்வது அவருடைய சொந்த பிரச்சனை அதில் ஏன் தேவையில்லாமல் சூர்யா தேவி மூக்கை நுழைக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கம் சொல்லும் வகையில் சூர்யா தேவி வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து வனிதா அக்காவின் பாச விழுதுகள் செம்ம கடுப்பில் உள்ளனர். அதற்கு காரணம் இது தான், நான் ஏன் உன்ன கழுவி ஊத்துறேன் தெரியுமா?. உன்ன நம்பி யூ-டியூப் சேனலை சப்ஸ்கிரைப் பண்ண 5 லட்சம் பேரில் நானும் ஒருத்தன். அவங்க நமக்கு வேணும் முக்கியமன்னு நினைச்சி தான் நான் உன் சேனலை கிளிக் பண்ணேன். பிள்ளைகளோட தனியா கஷ்டப்பட்டுற என்ன மாதிரி ஒரு பொண்ணுன்னு நினைச்சேன். 

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன், அவருடைய மனைவியுடன் இருக்கும் சின்ன வயசு போட்டோ... இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்...!

தினமும் உன் சேனலை பாலோப் பண்ணிட்டு வந்தால் திடீர்ன்னு நீங்க கல்யாணன்னு சொல்லுவீங்களாம்?, மோதிரம் மாத்துவீங்களாம்?, கவுன் மாட்டிக்கிட்டு வந்து கல்யாணம் செய்வீங்களாம் அதை எல்லாம் நாங்க ஒத்துக்க முடியுமா? என சகட்டுமேனிக்கு கழுவி ஊத்துகிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios