தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா, தான் சார்ந்த இந்து மதத்தின் மீதும் அளவற்ற ஈடுபாடு கொண்டவர். அவருடைய இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா 2014ம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார். மேலும், அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றிக்கொண்டார். அதன் பின்னர் 2015ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். கணவன், மனைவி இருவரும் சோசியல் மீடியாவில் தங்களிடம் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர். 

 

இதையும் படிங்க: நம்ம சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது?.... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அழகில் மெருகேறிய போட்டோஸ்...!

சமீபத்தில் ஷாஃப்ரூன் நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பலரும் நிஷாவிடம் தொடர்ந்து, யுவனை ஏன் மத மாற்றம் செய்தீர்கள்?, நீங்கள் இந்து மதத்திற்கு மாறியிருக்கலாமே?, இளையராஜாவின் மகனை மதமாற்றிவிட்டீர்களே? என ஒரே மாதிரியான கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டனர். அதற்கு“யுவன் 3 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இஸ்லாமை பின்பற்ற ஆரம்பித்திருந்தார். அதன் பிறகே அவருக்கும் எனக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அவரது மிகப்பெரிய கேள்விகளுக்கான பதில்கள் குரானில் கிடைத்திருக்கலாம். அதனால் அவருக்கு இஸ்லாம் மதத்தை பிடித்திருக்கலாம். மதத்தை தாண்டி எங்களுடைய எண்ண அலைவரிசை ஒரே மாதிரி இருந்தது, ஆரோக்கியமான உரையாடல் மூலமாக ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டோம்” என்று பதிலளித்திருந்தார். 

 

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன், அவருடைய மனைவியுடன் இருக்கும் சின்ன வயசு போட்டோ... இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்...!

இருப்பினும் இந்து மதத்தின் மீது பற்றுகொண்ட “இளையராஜாவின் மகனை இப்படி மதம் மாற்றிவிட்டீர்களே” என்று கூறி பலரும் ஷஃப்ரூனை கடுப்பேற்றினர். இந்நிலையில் நான் ஏன் இஸ்லாமிற்கு மாறினேன் என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா விளக்கமளித்தார். “இஸ்லாமில் யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் இல்லை என்பதும், பள்ளி வாசலில் தொழும் போது நம் இரு பக்கமும் யார் வேண்டுமானாலும் நின்று தொழலாம் என்பதும் தனக்கு பிடித்திருந்ததாக குறிப்பிட்டார். மேலும் தொழுகையின் போது இவர் தான் முன்னால் நிற்க வேண்டும், இவர் தான் பின்னால் நிற்க வேண்டும் என்ற பாகுபாடு இல்லை. இதுவே இஸ்லாத்தில் என்னை ஈர்த்த முதல் விஷயம். அதேபோல் நம் ஆன்மா எங்கு செல்கிறது, இந்த ஏழை பணக்காரர் வித்தியாசம் ஏன் என என் மனதில் தோன்றும் பல கேள்விகளுக்கு குர்ஆனை ஓதிய போது எனக்கு சரியான பதில் கிடைத்தது போல் உணர்ந்தேன்” என தெரிவித்தார். 

 

இதையும் படிங்க: காந்த கண்ணழகி சில்க் ஸ்மிதா பற்றி யாரும் அறிந்திடாத தகவல்கள்... இதோ...!

இதையடுத்து தற்போது யுவனின் இஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர், “உங்களுடைய மோசமான பயம் எது. அதில் இருந்து எப்படி மீண்டு வந்தீர்கள்” என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு யுவன் ஷங்கர் ராஜா சொன்ன பதில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. “நான் இஸ்லாமிற்கு வருவதற்கு முன்பு தற்கொலை எண்ணம் இருந்தது. அது தான் என் மோசமான பயம். அந்த எண்ணத்தில் இருந்து வெளியே வர இஸ்லாம் எனக்கு உதவியது” என தெரிவித்துள்ளார். எவ்வித பின்னணியும் இல்லாமல் சினிமாவில் தனி இடம் பிடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை விவகாரம் கொளுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில், இசை உலகமே தலை நிமிர்ந்து பார்க்கும் இசை ஞானி இளையராஜா மகனுக்கு இப்படியொரு எண்ணம் வந்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.