இந்நிலையில், இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடி போட உள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகி தீயாக பரவி வருகிறது. இந்த படத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையை ஒப்பந்தம் செய்த படக்குழு முடிவு செய்துள்ளதாகவும்.

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். 'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'அந்நியன்', 'சிவாஜி', 'எந்திரன்', '2.0' என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும். இவர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2 ' படம் இடியாப்ப சிக்கலில் இருக்கும் நிலையில், இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையே 'இந்தியன் 2 ' படம் குறித்த சில பிரச்சனைகளும் நடந்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

'இந்தியன் 2 ' படத்திற்காக காத்திருந்து நேரம் வீணடிக்க வேண்டாம் என, இயக்குனர் ஷங்கர் அடுத்தடுத்து ராம் சரண் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து படம் இயக்க தயாராகி விட்டார். இதனால் சுதாரித்து கொண்ட 'இந்தியன் 2 ' படத்தை தயாரித்து வந்த லைகா நிறுவனம், 'இந்தியன் 2 ' படத்தை முடிந்து கொடுத்த பின்பே மற்ற படங்களை இயக்குனர் ஷங்கர் இயக்க வேண்டும் என நீதி மன்றத்தில் தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்: ஜாக்கெட் போடாமல் சேலை மட்டும் கட்டி... பிரபல நடிகை நடத்திய ஹாட் போட்டோ ஷூட்..! புகைப்பட தொகுப்பு

இடையில் தன்னுடைய தரப்பில் இருந்த நியாயத்தையும் இயக்குனர் ஷங்கர் தெரிவித்திருந்தார். ஒருபுறம் 'இந்தியன் 2 ' பிரச்சனைகள் இருந்தாலும் மற்றொரு புறம் அவ்வப்போது ஷங்கரின் அடுத்த படும் குறித்த சில தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில், இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கவுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தான். இதில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

மேலும் செய்திகள்: கொரோனா தேவி சிலையோடு ஒப்பிட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்! கடுப்பாகி வனிதா போட்ட பதிவு!

பிரம்மாண்டமாக உருவாக உள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது. படத்தின் ஷூட்டிங் மற்றும் பிற நடிகர்கள், டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்:பாடலாசிரியர் சினேகனுக்கு விரைவில் டும்... டும்... டும்..! மணப்பெண் யார்? கசிந்தது தகவல்..!

இந்நிலையில், இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடி போட உள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகி தீயாக பரவி வருகிறது. இந்த படத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையை ஒப்பந்தம் செய்த படக்குழு முடிவு செய்துள்ளதாகவும். அதன் படி தற்போது, நடிகை ஆலியா பட்டுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ராம் சரண் தேஜா மற்றும் ஆலியா பட் இருவரும் இணைந்து, இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.