பாடலாசிரியர் சினேகனுக்கு விரைவில் டும்... டும்... டும்..! மணப்பெண் யார்? கசிந்தது தகவல்..!
பாடலாசிரியர், நடிகர், மற்றும் அரசியல்வாதி என பல்வேறு பரிமாணங்களிளோடு அறியப்படும் சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பல சூப்பர் ஹிட் பாடல்களை, முன்னணி நடிகர்கள் படங்களுக்கு எழுதியுள்ளனர் பாடலாசிரியர் சினேகன்.
அதை தாண்டி, யோகி, உயர் திரு 420 , கோமாளி, பூமி வீரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் பாடலாரிசியராகவும், நடிகராகவும் அறியப்பட்டதை விட, மக்கள் மனதில் இவரை மிகவும் பிரபலமாகியது என்றால் அது பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி தான்.
பொறுமை, அமைதி, நிதானம், அரவணைப்பு, பாசம், என அனைத்து நற்குணங்களையும் வெளிக்காட்டி ஃபைனல் வரை வந்தார்.
பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை கை பற்றவில்லை என்றாலும், மக்களிடம் அதிக வாக்குகளை பெற்று ரன்னராக மாறினார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும், ஒரு சில படங்களும், பாடல் எழுதும் பணிகளிலும் பிஸியான சினேகன், பின்னர் நடிகர் கமல்ஹாசன் துவங்கிய 'மக்கள் நீதி மய்யம்' கட்சியில் இணைந்து, மக்கள் பணியாற்ற முடிவு செய்தார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மக்கள் நீதி மய்யம் சார்பில், விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதைத்தொடர்ந்து, தற்போது இவருடைய கல்யாண பேச்சு அதிக அளவில் அடிபட்டு வருகிறது. சினேஹானுக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்து விட்டார்களாம்.
எனவே சினேகன் உறவினர் பெண் ஒருவரை திருமணம் செய்து உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த திருமணம், மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தலைமையில் நடைபெற உள்ளதாம். விரைவில் திருமண தேதி குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.