உலக மக்களையே ஆட்டி படைத்தது வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் எடுத்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் சிலர், ஒரு படி மேலே போய் கொரோனா தேவி சிலையை வைத்துள்ளார். இந்த சிலை பார்ப்பதற்கு வனிதா விஜயகுமார் போல் இருப்பதாக நெட்டிசன்கள் சிலர் கலாய்த்து வருகிறார்கள். 

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தன்னுடைய முதல் அலையை துவங்கிய கொரோனா வைரஸ், பின்னர் சற்று தணிந்த நிலையில், மீண்டும் கடந்த 3 மாதங்களாக மக்களை அச்சுறுத்த துவங்கியுள்ளது. முதல் அலையை விட இரண்டாவது அலையால், தமிழகத்தில் பாதிக்க படுபவர்கள் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசு மே 10 ஆம் தேதி முதல், மே 24 ஆம் தேதி வரை, ஒரு சில தளர்வுகளை மட்டுமே அறிவித்து முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிய சிரஞ்சீவி..! உருக்கமாக நன்றி தெரிவித்த பொன்னம்பலம்..!

ஆனால் ஊரடங்கு அறிவித்த பின்பும், பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 24 ஆம் தேதியில் இருந்து மேலும் சில சில வாரங்களுக்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது . இதுகுறித்த பேச்சுவார்த்தையில் இன்று முதல்வர் முக. ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். 

மேலும் செய்திகள்: சமந்தா, பிரகாஷ் ராஜ், போன்ற பல நடிகர்களை கலங்க வைத்த முக்கிய பிரபலத்தின் மரணம்!

அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோவையில் உள்ளவர்கள் ஒருபடி மேலே சென்று கொரோனா தேவி சிலை வைத்து மக்கள் விரைவில் கொரோனாவில் இருந்து விடுபட வேண்டும் என வேண்டுதலோடு வழிபட்டு வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Scroll to load tweet…

இந்த நிலையில் சில நெட்டிசன்கள் கொரொனாதேவி சிலை, பார்ப்பதற்கு வனிதா விஜயகுமார் போலவே இருப்பதாக ஜாலியாக கேலி கிண்டல் செய்து, அதுகுறித்த மீம்ஸ்களை அவருக்கே டேக் செய்து வருகின்றனர். இந்த புகைப்படத்தை பார்த்த வனிதா விஜயகுமார், கடுப்பாகி, "எல்லோரும் இதை ஏன் எனக்கு ஷேர் செய்கிறார்கள்? என்று பதிவு செய்து கேள்வி எழுப்பியுள்ளார்". இந்த பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிய சிரஞ்சீவி..! உருக்கமாக நன்றி தெரிவித்த பொன்னம்பலம்..!

Scroll to load tweet…
Scroll to load tweet…