- Home
- Cinema
- சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிய சிரஞ்சீவி..! உருக்கமாக நன்றி தெரிவித்த பொன்னம்பலம்..!
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிய சிரஞ்சீவி..! உருக்கமாக நன்றி தெரிவித்த பொன்னம்பலம்..!
தமிழ் திரையுலகில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் பொன்னம்பலத்திற்கு நடிகர்கள் கமல், ரஜினி, ஆகியோர் ஓடோடி வந்து உதவி செய்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி உதவிய தகவலை வீடியோ மூலம் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, இந்தியன், முத்து, நாட்டாமை உள்ளிட்ட பல படங்களில் வெற்றி படங்களில் நடித்துள்ளதால், ரஜினிகாந்த், கமல் போன்ற பல பிரபலங்களுக்கு நட்பு ரீதியாக மிகவும் நெருக்கமானவர் பொன்னம்பலம்.

சில காலம் திரையுலகை விட்டே காணாமல் போன இவர், மீண்டும் திரைப்பட வாய்ப்புகளை பிடிக்க வேண்டும் என, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். ஆனால் ஒரு சில காரணங்களால், மக்களிடம் குறைவாக ஓட்டுக்களை பெற்று வெளியேறினார்.

வெளியே வந்த பின்னர் இவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனிடையே திடீரென சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த கமல் ஹாசன், பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு உதவினார். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கான பணத்தை ஏற்றுக்கொண்டார்.

அதே போல் அஜித்தும் மருத்துவ செலவுகளுக்காக பணம் கொடுத்ததாகவும், தன்னுடைய ரசிகர்கள் கூட, அவர்களால் முடிந்ததை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு, பிரபல தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி , ரூ.2 லட்சம் கொடுத்து உதவியதாக வீடியோ வெளியிட்டு உருக்கமாக தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில்... அண்ணன் சிரஞ்சீவி அவர்களுக்கு வணக்கம்! ரொம்ப நன்றி அண்ணா, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நீங்கள் கொடுத்த இரண்டு லட்ச ரூபாய் மிகவும் உதவியாக இருந்தது. உயிருள்ளவரை உங்களை மறக்க மாட்டேன். உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. ஆண்டவர் உங்களை எப்போதுமே உங்கள் பெயர் கொண்ட ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக உங்களை வைத்திருப்பார். ஜெய்ஸ்ரீராம், நன்றி’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.