பாண்டியன் ஸ்டார் உள்ளிட்ட பல சீரியல்கள், மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம்,  மிகவும் பிரபலமானவர் வி.ஜே.சித்ரா. இவருக்கு கடத்த ஆகஸ்ட் மாதம்  24 ஆம் தேதி, ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இது குறித்த வீடியோ ஒன்று, சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

மேலும் செய்திகள்: அப்போவே சொன்ன வனிதா...! பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கப்போகும் எலிசபெத் ஹெலன்?
 

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சட்டம் சொல்வது என்ன?' என்கிற நிகழ்ச்சியின் மூலம், முதல் முதலில் தொகுப்பாளராக அடையாளம் காணப்பட்டவர் சித்ரா. பின்னர் நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுற்றலாம் வாங்க, ஆகிய பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதை தொடர்ந்து சீரியல்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார்.

அந்த வகையில், சின்ன பாபா, பெரிய பாபா, சரவணன் மீனாட்சி, வேலூனாட்சி போன்ற போன்ற சீரியல்களில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டார்' சீரியலில் முல்லை என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஏறக்குறைய 10 முக்கிய கதாப்பாத்திரம் இருந்தாலும், முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ராவிற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

மேலும் செய்திகள்: விஜய், ரஜினிகாந்த், உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்ட கீர்த்தி - சாந்தனு திருமண போட்டோஸ்! 5 வருஷம் ஆகிடுச்சா
 

மேலும், சமீப காலமாக விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்து வரும் சித்ராவிற்கு, இவருடைய பெற்றோர் சமீபகாலமாகவே மாப்பிள்ளை தேடி வருவதாக கூறி வந்த நிலையில் திருமண நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது.

மேலும் செய்திகள்: ஓவர் சீன் போட்ட நயன்தாராவை தூக்கி எறிந்த பிரபல நடிகர்..! கேட்ட சம்பளத்தில் தலை சுற்றி போன தயாரிப்பாளர்..!
 

சித்ராவை திருமணம் செய்து கொள்ள உள்ளவர் பெயர் ஹேமந்த் என்றும், அவர் ஒரு தொழிலதிபர். ஏற்கனவே இவருடைய திருமண நிச்சயதார்த்தம் குறித்த சில புகைப்படங்கள் மட்டும் வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில், திருமண நிச்சயதார்த்தத்தை போது, சித்ரா தன்னுடைய வருங்கால கணவருக்கு, அவர் சற்றும் எதிர்பாராத சர்பிரைஸ் கொடுத்த வீடியோ ஒன்று, வெளியாகி உள்ளது. இதில், ஒரு பெட்டி நிறைய சிவப்பு நிற ஹார்ட் கேஸ் பலூன்களை வைத்து, ஹேமந்தை திறக்க சொல்கிறார். பலூன்களும் பறந்து செல்கிறது.... 

இந்த வீடியோவை சித்ராவின் தீவிர ரசிகர் ஒருவர்  வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ இதோ...

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@chithuvj @mullai_pandianstoresvjtv

A post shared by Chithuvj🌹 fan🌹 kandhasamy🌹 c.k (@chithuvj_fan_kandhasamy__c.k) on Sep 1, 2020 at 2:21pm PDT