விரைவில் தமிழ் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. இது குறித்த ப்ரோமோ ஒன்றும் வெளியாகி இந்த தகவலை உறுதி செய்தது. கமல்ஹாசன், முரட்டு தாடி, மீசை என புதிய கெட்டப்பில் இதில் தோன்றி இருந்தார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

மேலும் செய்திகள்: விஜய், ரஜினிகாந்த், உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்ட கீர்த்தி - சாந்தனு திருமண போட்டோஸ்! 5 வருஷம் ஆகிடுச்சா
 

இந்நிலையில், நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கும் வகையில்... நடிகர் நடிகைகளோடு சேர்த்து , சில சர்ச்சையான போட்டியாளர்களை நிகழ்ச்சிக்கு கொண்டு வர பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே, வனிதா விஷயத்தில் வாயை விட்டு, கைதாகி, காவல் நிலையம் வரை சென்று வந்த சூர்யா தேவி போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல், பூனம் பஜ்வா, கிரண் ரத்தோர், ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி புகழ், உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில ஹாண்ட்சம் இளம் ஹீரோக்கள் மற்றும் மாடல்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்:  ஓவர் சீன் போட்ட நயன்தாராவை தூக்கி எறிந்த பிரபல நடிகர்..! கேட்ட சம்பளத்தில் தலை சுற்றி போன தயாரிப்பாளர்..!
 

இது ஒருபுறம் இருக்க, தற்போது வனிதா மூன்றாவது திருமணம் மூலம் பிரபலமான, பீட்டர் பாலில் முதல் மனைவி,  எலிசபெத் ஹெலன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாகவும், அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த உறுதியான தகவல்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது தான் தெரியவரும்.

மேலும் செய்திகள்: 7ஜி ரெயின்போ காலனி படத்தில் முதலில் நடித்தது இவரா? பாதியில் வெளியேறி சூப்பர் ஹிட்டை மிஸ் செய்த நடிகை!
 

எலிசபெத் ஹெலன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக வெளியான தகவலால், வனிதாவின் வாக்கு பலித்துள்ளது. ஏற்கனவே வனிதா வெளியிட்ட வீடியோ ஒன்றில், எப்படியும் பிரபலம் ஆகி தாடி பாலாஜியின் மனைவி நித்தியா போல் எலிசபெத் ஹெலனும், பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்க முயற்சி செய்வதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.