நடிகர் விவேக் தன்னுடைய மைத்துனருக்கு கொரோனா இருந்ததாகவும், அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறி ட்விட் ஒன்றை போட்டுள்ளார். இந்த ட்விட் பலருக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்: நடிகை சமந்தாவின் பிரமாண்ட வீடு... அடேங்கப்பா எவ்வளவு பெருசா இருக்கு? வாங்க பார்க்கலாம்!
 

கொரோனா பீதி, நாளுக்கு நாள் மக்களை ஒருபுறம் பயமுறுத்தி வந்தாலும், மருத்துவர்கள் அயலாது உழைத்து அணைத்து நோயாளிகளுக்கும் தகுந்த சிகிச்சை அளித்து வருகிறார்கள். சாதாரண மனிதன், பிரபலம் என யாரையும் விட்டு வைக்காமல் பதம் பார்த்து வரும் கொரோனா வைரஸால் பல பிரபலங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உட்பட அவருடைய மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: 30 வயது இளம் நடிகை புற்றுநோயால் மரணம்..! மரண படுக்கையில்... இதயத்தையே உலுக்கிய அவருடைய வார்த்தை..!
 

இதை தொடர்ந்து, பிரபல கோலிவுட் நடிகர் விவேக் குடும்பத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இவருடைய மைத்துனருக்கு கொரோனா ஏற்பட்டு காய்ச்சல்,மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.10 நாட்களில் முற்றிலும் குணமடைந்துள்ளதாகவும். எளிய இடம் ஆனால் சிறந்த மருத்துவ வசதி,சிகிச்சை,தரமான உணவு கிடைத்துள்ளது. என கூறி அரசு மருத்துவர்களுக்கு நன்றி என ட்விட் செய்துள்ளார்.

இந்த பதிவிற்கு பலர், தனியார் மருத்துவ மனைகளை விட, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். இதில் இருந்து அரசு மற்றும் மருத்துவர்கள் சிறப்பாக பணியாற்றி வருவதை காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.