பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் FDFS பார்க்க தியேட்டருக்கு வந்த குரங்கு - வைரலாகும் வீடியோ
பிரபாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் முதல் காட்சியை பார்க்க குரங்கு ஒன்று தியேட்டருக்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ஆதிபுருஷ். ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படம் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் ராமனாக பிரபாஸ் நடித்துள்ளார். அதேபோல் சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக சையிப் அலிகானும் நடித்துள்ளனர். இப்படம் உலகமெங்கும் இன்று பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது.
பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டில் இப்படத்திற்கு அதிகாலை காட்சி திரையிடப்படவில்லை என்றாலும், தெலுங்கானாவில் இப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்பட்டது. இதனால் அதிகாலையிலேயே தியேட்டர் முன் குவிந்த நடிகர் பிரபாஸின் ரசிகர்கள், பட்டாசு வெடித்தும், பிரபாஸின் பிரம்மாண்ட கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.
இதையும் படியுங்கள்... பிரபாஸ் ராமனாக அதகளப்படுத்தினாரா? அப்செட் ஆக்கினாரா? - ஆதிபுருஷ் திரைப்படத்தின் முழு விமர்சனம் இதோ
ஆதிபுருஷ் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் அனுமனுக்காக ஒரு சீட் ஒதுக்கப்படும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தது. அவர்கள் சொன்னபடியே திரையரங்குகளில் அனுமனுக்காக ஒரு சீட் ஒதுக்கி, அந்த சீட்டை காவிநிற துணியால் அலங்கரித்து, அதில் அனுமனின் படங்களையும் வைத்துள்ளனர். அனுமன் சீட் அலங்கரிக்கப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில், மற்றுமொரு ஆச்சர்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், ஆதிபுருஷ் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர் ஒன்றில் அப்படத்தை பார்க்க குரங்கு ஒன்று வந்துள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள், அனுமனே நேரில் வந்ததாக கருதி கத்தி ஆர்ப்பரித்ததோடு மட்டுமின்றி, திரையரங்கில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டுள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... பொம்மை படத்தை புரோமோட் செய்த பிரியா பவானி ஷங்கர்! 'ஆதிபுருஷ்' படத்தை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் !