Suriya Dance: நடிகர் சூர்யாவா இது? பிறந்தநாள் பார்ட்டியில் வெறித்தனமாக குத்தாட்டம் போடும் வீடியோ வைரல்..!

நடிகர் சூர்யா, பிறந்தநாள் பார்ட்டி ஒன்றியில் கலந்து கொண்டு குத்தாட்டம் போடுவது போல் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் உண்மையில் சூர்யாவா இது? என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
 

Viral video of Actor  Suriya dancing at the party

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. தொடர்ந்து வித்யாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து, தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், கடந்த 2020 ஆம் ஆண்டு, பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்து தயாரித்திருந்த 'சூரரைப் போற்று' படத்திற்காக தேசிய விருதுகளை வாங்கி குவித்தார்.

இதைத்தொடர்ந்து, சூர்யா நடித்து தயாரித்த மற்றொரு படமான, 'ஜெய் பீம்' திரைப்படமும் விமர்சன  ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த இரு படங்களும் ஓடிடியில் வெளியாகாமல் ஒரு வேளை திரையரங்குகளில் வெளியாகி இருந்தால், வசூல் சாதனை செய்திருக்கும் என திரைப்பட விமர்சகர்கள் கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக இரு படங்களுமே ஓடிடி தளத்தில் வெளியானது.

Kamal Haasan: மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் கமல்ஹாசன்.!

Viral video of Actor  Suriya dancing at the party

தற்போது சூர்யா தன்னுடைய திரையுலக  வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய இயக்குனர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்'படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் இந்த தகவல் முற்றிலும் வதந்தி என சூர்யா - பாலா இருவருமே வெதிரித்ததை தொடர்ந்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி கிடைத்தது.

அல்டரா கிளாமர் உடையில்... கண்டமேனிக்கு கவர்ச்சியை காட்டி மூச்சு முட்ட வைக்கும் மாளவிகா மோகனன்!

Viral video of Actor  Suriya dancing at the party

 மேலும், சூர்யா தன்னுடைய 42 வது படத்தை அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்களின் ஒருவரான... சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் 3d தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டு , சுமார் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. அதே போல் இந்த படத்தில் சூர்யா, ஐந்து கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும்... இது ஒரு பேண்டஸி ஜெர்னர் வகைமையை சேர்ந்த திரைப்படம் என்றும் சமீபத்தில் இந்த படத்தின் படத்தொகுப்பாளர் நிவாஸ் யூசுப் தெரிவித்திருந்தார். அதே போல் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்திலும் 'வாடிவாசல்' என்கிற படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார்.

எலிமினேஷனில் எஸ்கேப்பான ராபர்ட் மாஸ்டர்.! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது இவரா? ஷாக் தகவல்!

Viral video of Actor  Suriya dancing at the party

அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்கள் படங்களை தன் கையில் வைத்து கொண்டு, பிசியாக நடித்து வரும் சூர்யா...  நண்பரின் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு குத்தாட்டம் போட்டது போன்று இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதே நேரம் இது உண்மையில் சூர்யா தானா? அல்லது சூர்யா போல் தோற்றம் கொண்ட வேறு யாரேனும் ஒரு நபர் டான்ஸ் ஆடி இருக்கிறாரா? என ரசிகர்கள் சந்தேக கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வரும் வீடியோ இதோ...

Samantha: சமந்தா உடல்நிலை மோசமாகிக்கொண்டே செல்கிறதா? எங்கு இருக்கிறார்..! வெளியான உண்மை!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios