Samantha: சமந்தா உடல்நிலை மோசமாகிக்கொண்டே செல்கிறதா? எங்கு இருக்கிறார்..! வெளியான உண்மை!
நடிகை சமந்தா உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வந்த நிலையில், தற்போது இதற்கு சமந்தாவின் செய்தி தொடர்பாளர் உண்மை என்ன என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் திருமணம் ஆகி விவாகரத்துக்கு பின்பும்... தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக நடித்து வருபவர் சமந்தா. இந்நிலையில் இவர் சமீபத்தில் மயோசிட்டிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து, சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும்போதே டப்பிங் பேசும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இவருடைய இந்த புகைப்படம் சமந்தா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமந்தா உடல்நிலை சரியாக இல்லாத போதும், சினிமா மீது எந்த அளவிற்கு ஈடுபாடுடன் உள்ளார் என்பதாகும் இந்த புகைப்படம் சான்றாக அமைந்தது. இதைத் தொடர்ந்து, நடிகை சமந்தா நடிப்பில்.. கடந்த நவம்பர் 11-ந் தேதி திரையரங்கில் ரிலீசான யசோதா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
வாடகை தாய் விவகாரம் குறித்தும், அதன் மருத்துவமுறையில் ஏற்படும் முறைகேடுகள் குறித்தும் விளக்கும் விதமாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இதில் நடிகை சமந்தா வாடையை தாயாக நடித்திருந்தார். மேலும் யசோதா திரைப்படம் சர்ச்சைக்குரிய விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் ஓடிடியில், யசோதா படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நடிகை சமந்தா மயோசிட்டிஸ் பிரச்சினை காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால்,அடுத்தடுத்து பல பட வாய்ப்புகளை இழந்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் திடீரென உடல்நல பிரச்சனை ஏற்பட்டு, ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் தீயாக பரவியது.
103 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் தளபதி விஜய்யின் பாட்டி..! வைரலாகும் புகைப்படம்..!
இந்த தகவல் சமந்தா ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அவர் விரைவில் இந்த பிரச்சனைகள் இருந்து மீண்டு வர வேண்டும் என ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த தகவல் குறித்து, சமந்தாவின் செய்தி தொடர்பாளர் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், சமத்தா தற்போது ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் நல்ல உடல் நிலையுடன் ஓய்வெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து சமந்தாவின் உடல்நிலை குறித்து பரவி வந்த தகவல் முற்றிலும் வதந்தி என்பது உறுதியாகியுள்ள நிலையில் ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.