Hansika Motwani: கல்யாணம் நெருங்கும் நேரத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய ஹன்சிகா! அதகள ஹாட் போட்டோஸ்..!
தமிழ் சினிமாவில் பப்ளி நாயகி ஆக அறிமுகமாகி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட, நடிகை ஹன்சிகா... தன்னுடைய திருமண நேரத்தில் கவர்ச்சி பொங்க போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
Photo credit- IDIVA
மும்பையை சேர்ந்த நடிகை ஹன்சிகா, ஹிந்தியில் கடந்த 2003 ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர். இதைத்தொடர்ந்து கடந்த 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் பெற்றார்.
Photo credit- IDIVA
இதை தொடர்ந்து, ஹிந்தி, கன்னடா, போன்ற மொழிகளில் நடித்த நடிகை ஹன்சிகா... தமிழில் 2011 ஆம் ஆண்டு நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் அறிமுகமானார்.
Photo credit- IDIVA
கொழுக்கு மொழுக்கு அழகில் தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்த ஹன்சிகாவுக்கு தொடர்ந்து விஜய், ஆர்யா, சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
Photo credit- IDIVA
தற்போது இவர் சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், திடீரென பிரபல தொழிலதிபர் சோஹல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ள தகவலை, ரொமான்டிக் புகைப்படம் வெளியிட்டு அறிவித்தார்.
Breaking: கமல் ஹாசனுக்கு என்ன பிரச்சனை? உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!
Photo credit- IDIVA
அதன்படி ஹன்சிகாவின் திருமணம் டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஹன்சிகாவின் திருமண சடங்குகளும் வெகு சிறப்பாக நடந்து வருகிறது.
Photo credit- IDIVA
இது ஒரு பக்கம் இருக்க... ஹன்சிகா கவர்ச்சி உடையில் பிரபல நிறுவனத்திற்காக போட்டோ ஷூட் செய்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
103 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் தளபதி விஜய்யின் பாட்டி..! வைரலாகும் புகைப்படம்..!
Photo credit- IDIVA
தினுசு தினுசான மாடர்ன் உடையில்... கவர்ச்சி பொங்கும் அழகில் மிளிர்கிறார் ஹன்சிகா. திருமண நேரத்தில் இப்படி ஒரு ஹாட் போட்டோ ஷூட்டானா என ரசிகர்கள் மூக்கின் மீது விரல் வைத்துள்ளனர்.