Kamal Haasan: மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் கமல்ஹாசன்.!

நடிகர் கமலஹாசன் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று பூரண குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து  டிஸ்சார்ஜ் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

Actor Kamal Haasan discharged from hospital

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமலஹாசன், 23.11.2022 (புதன் கிழமையன்று) திடீரென ஏற்பட்ட உடல் நல குறைவு காரணமாக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் ஹைதராபாத் சென்று, சென்னை திரும்பிய நிலையில் காய்ச்சல், ஜுரம், மற்றும் சளி பிரச்சினையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

Actor Kamal Haasan discharged from hospital

இதைத்தொடர்ந்து, நடிகர் கமல் ஹாசனின் ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் பலர், கமல் ஹாசனுக்கு என்ன ஆனது? என மிகவும் பரபரப்பாக கேள்வி எழுப்பி வந்த நிலையில்... நேற்று மதியம் ராமச்சந்திரா மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிட்டு அதில் கமல்ஹாசனின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் "ஸ்ரீ கமலஹாசன் அவர்கள் லேசான காச்சல், இருமல், மற்றும் சளி பிரச்சினையின் காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் நன்கு உடல் நலம் தேறி வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மகள் பிறந்து 14 ஆண்டுகளுக்கு பின் பிறந்த 2-வது குழந்தை... மீண்டும் தந்தையான மகிழ்ச்சியில் நடிகர் நரேன்

Actor Kamal Haasan discharged from hospital

எலிமினேஷனில் எஸ்கேப்பான ராபர்ட் மாஸ்டர்.! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது இவரா? ஷாக் தகவல்!

இதை அடுத்து இன்று அவர் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும், மருத்துவர்கள் கமல் ஹாசன் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கமல் ஹாசன் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதால், நாளைய தினம் கமல் ஹாசனே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா? அல்லது கடந்த சீசனில் கமலஹாசன் உடல் நலம் சரியில்லாத போது ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியதை போல், மற்ற பிரபலங்கள் யாரேனும் தொகுத்து வழங்குவார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது. எனினும் இது குறித்த விவரம் நாளை தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios