மகள் பிறந்து 14 ஆண்டுகளுக்கு பின் பிறந்த 2-வது குழந்தை... மீண்டும் தந்தையான மகிழ்ச்சியில் நடிகர் நரேன்
தமிழில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, கைதி, விக்ரம் போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் நரேனுக்கு தற்போது 2-வது குழந்தை பிறந்துள்ளது.
மலையாள நடிகரான நரேன், கடந்த 2006-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து எஸ்.ஏ.சி இயக்கிய நெஞ்சிருக்கும் வரை, தங்கர்பச்சனின் பள்ளிக்கூடம், மிஷ்கினின் அஞ்சாதே என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து பாப்புலர் ஆனார் நரேன்.
பின்னர் சில ஆண்டுகள் தமிழ் படங்களில் நடிக்காமல் மலையாள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நரேன், கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த கத்துக்குட்டி படம் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் ரீ-எண்ட்ரி கொடுத்தார். குறிப்பாக ரீ-எண்ட்ரிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த கைதி மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் அவரது கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்... 5 கெட்டப்பில் தோன்றும் சூர்யா! என்ன ஜெர்னர்? சிறுத்தை சிவா படத்தின் வேற லெவல் அப்டேட் கொடுத்த பிரபலம்!
இவ்வாறு தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் சக்சஸ்ஃபுல் நடிகராக வலம் வரும் நரேன், கடந்த 2007-ம் ஆண்டு மஞ்சு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2008-ம் ஆண்டே தன்மையா என்கிற மகள் பிறந்தார். தற்போது நரேனின் மகளுக்கு 14 வயது ஆகும் நிலையில், சமீபத்தில் தனது 15-வது திருமண நாளன்று தனது மனைவி 2-வது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டு இருந்தார் நரேன்.
இந்நிலையில், நடிகர் நரேன், தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ள தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். முதல் குழந்தை பிறந்து 14 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது குழந்தை பெற்றெடுத்த நரேன் - மஞ்சு ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. குழந்தை தன் கைவிரலை பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் நரேன்.
இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயன் இடத்திற்கு விமல் வந்திருக்க வேண்டும்! கார்னர் செய்யப்படும் விஜய்! லிங்குசாமி - பேரரசு ஆதங்கம்