5 கெட்டப்பில் தோன்றும் சூர்யா! என்ன ஜெர்னர்? சிறுத்தை சிவா படத்தின் வேற லெவல் அப்டேட் கொடுத்த பிரபலம்!
நடிகர் சூர்யா அஜித்தின் ஆஸ்தான இயக்குனர், சிறுத்தை சிவா உடன் இணைந்து நடித்து வரும் 42ஆவது திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடித்து வரும்... இன்னும் பெயரிடப்படாத படத்திற்கு, 'சூர்யா 42' என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து மிக பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கின்றனர்.
சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி சூர்யா ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. மேலும் இந்த படத்தில், பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி, சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதைப்போல் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் மேலும் 10 மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது.
வெற்றி பழனிச்சாமி ஒளிபதிவில், மிலன் கலை இயக்குனராக பணியாற்ற உள்ளார். இந்த படத்திற்கு மதம் கார்க்கி வசனம் எழுத உள்ளார். மேலும் இப்படத்திற்கு படத்தொகுப்பாளராக நிஷாத் யூசுப் பணி புரிகிறார்.
இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதில் சூர்யா மட்டும் அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனத்தார் என ஐந்து கதாபாத்திரங்களில் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் ஜெர்னர் குறித்து பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள, படத்தொகுப்பாளர் நிஷாந்த் யூசுப் இது ஃபேண்டஸி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என தெரிவித்துள்ளார். அதேபோல் ஆயிரம் வருடத்திற்கு முன்பும் தற்போதைய காலகட்டத்திற்கும் ஏற்ற போல் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூடுதல் தகவல் வெளியிட்டுள்ளார். எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
நன்றி பிஹைண்ட் வூட்ஸ்