அல்டரா கிளாமர் உடையில்... கண்டமேனிக்கு கவர்ச்சியை காட்டி மூச்சு முட்ட வைக்கும் மாளவிகா மோகனன்!
பிங்க் நிற ஸ்டிராப் லெஸ் உடையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்து நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
மலையாள திரையுலகில் இருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் நாட்டில் எப்போதுமே தனி மவுசு உண்டு. அந்த வகையில் கேரளாவில் இருந்து வந்து தமிழ்நாட்டில் கலக்கிக்கொண்டிருப்பவர் தான் மாளவிகா மோகனன்.
ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் மாளவிகா. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிலீசான இப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா. இப்படத்தில் சிறிய வேடமாக இருந்தாலும் அவரது கதாபாத்திரம் மனதில் பதியும்படி இருந்தது.
இதையடுத்து மாளவிகா மோகனனுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் மாஸ்டர். விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும் நிலையில், கோலிவுட்டில் அறிமுகமான இரண்டாவது படத்திலேயே தளபதியுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் மாளவிகா.
இதையும் படியுங்கள்... விஜய்யின் வாரிசு படத்தில் சிம்பு... காத்துவாக்குல வந்த கலக்கல் அப்டேட்டால் குஷியான ரசிகர்கள்
இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கிய மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மாளவிகா, தற்போது சியான் விக்ரமின் 61-வது படமான தங்கலானில் நடித்து வருகிறார். பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார் மாளவிகா.
இவ்வாறு தொடர்ந்து கோலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் மாளவிகா, அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதன்படி தற்போது பிங்க் நிற ஸ்டிராப் லெஸ் உடையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... தொடர் தோல்வியில் இருந்து சந்தானத்தை மீட்டதா ஏஜெண்ட் கண்ணாயிரம்? - டுவிட்டர் விமர்சனம் இதோ