தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாது பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. முதன் முறையாக விஜய்யுடன் விஜய் சேதுபதி ஒன்றிணைந்துள்ள மாஸ்டர் படத்தை காண இருவரது ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது லாக்டவுனால் திரைத்துறையில் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தாலும் விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

இதையும் படிங்க: டிரஸ் போட்டிருக்கீங்களா?... பிரபல தொகுப்பாளினி டிடி-யின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

உலக நாயகன் கமல் ஹாசன் தயாரித்து இயக்க உள்ள தலைவன் இருக்கிறான் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த படம் தேவர் மகன் 2 படத்தின் கதை என்றும், நாசர் மகனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருபக்கம் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கடந்த 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இடம் பொருள் ஏவல் திரைப்படம் லாக்டவுன் முடிந்தவுடனேயே ரிலீஸ் ஆக உள்ளது. 

இதையும் படிங்க: கர்ப்பமாக இருப்பது உண்மை தான்... அம்மாவானதை உறுதி செய்தார் மைனா நந்தினி...!

இந்நிலையில் விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. கையில் விலங்குடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார். மொத்த கதையும் ஐஸ்வர்யா ராஜேஷை மையாக கொண்டு தான் நகர உள்ளதாம். இந்த படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு ரிலீஸ் ஆகும் என தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.