'வம்சம்' படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர் நடிகை நந்தினி.  இந்த படத்தை தொடர்ந்து, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' , போன்ற சில தமிழ் படங்களில் நடித்தாலும் இவரால் காமெடி நடிகையாக ஜொலிக்க முடியவில்லை.இதனால் வெள்ளித்திரையில் இருந்து விலகி, சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். இவர் நடித்த முதல் சீரியலான 'சரவணன் மீனாட்சி'யில்  மைனா என்கிற இவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இவரை மிகவும் பரிச்சியமாக்கியது.  

இதையும் படிங்க: இந்த நடிகையால் மட்டும் எப்படி?... புடவையில் கூட தினுசு, தினுசாக கவர்ச்சி காட்டும் அர்ச்சனா குப்தா!

அதனைத் தொடர்ந்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனை கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய சீரியல்களில் நடித்தார். சீரியலில் பிசியாக நடித்து வந்த நந்தினி முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். பெற்றோருடன் மைனா நந்தினி வசித்து வந்த நேரத்தில், அவரது முதல் கணவர் கார்த்திகேயன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் சில காலங்கள் சீரியலில் இருந்து விலகி இருந்த மைனா நந்தினி மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். 

இதையும் படிங்க: மீண்டும் வெளியானது ஆன்ட்ரியா லிப் லாக் காட்சி.... தீயாய் பரவும் வீடியோ...!

மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஸ்வரனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து யோகேஸ்வரனுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி வந்த மைனா நந்தினி, தற்போது கர்ப்பமாக உள்ளார். நேற்று மைனா நந்தினி தனது பிறந்தநாளை கணவர் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடினர். அந்த வீடியோக்கள் மற்றும் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலானது. 

இதையும் படிங்க: டிரஸ் போட்டிருக்கீங்களா?... பிரபல தொகுப்பாளினி டிடி-யின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

அதில் மைனா நந்தினி சற்றே உடல் எடை கூடி காணப்பட்டார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து பேட்டி ஒன்றிற்கு பதிலளித்த மைனா நந்தினி தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார். இதைக்கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் யோகேஷ்வரன் - மைனா நந்தினி தம்பதிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.