விஜய பிரபாகரன் தனது பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அனைவராலும் கேப்டன் என்றே அழைக்கப்பட்டு வந்தார். சினிமாவில் மட்டுமல்ல உலகில் கடைக்கோடியில் வசிப்பவர்களையும் தனது குடும்பமாகவே கருதினார். இவ்வளவு ஏன், படப்பிடிப்பில் அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்று கூறி அதனை தானே செய்தும் காட்டினார்.
'வாரிசு' படத்தின் ஆடியோ லான்ச் எங்கு? எப்போது நடைபெறுகிறது..! பரபரக்கும் ஏற்பாடுகள்.. வெளியான தகவல்!
எத்தனையோ மாஸ், சூப்பர் டூப்பர் படங்களை கொடுத்த விஜயகாந்த், நடிகர் சங்க தலைவராகவும் இருந்தார். அப்போது நடிகர் சங்கத்தில் இருந்த கடனை அடைப்பதற்கு வெளிநாடுகளுக்கு சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் வந்த பணத்தை வைத்து கடனை அடைத்தார். அதோடு, நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தையும் செயல்படுத்தினார்.
அதன் பிறகு அரசியலில் கால் பதித்து, அரசியலிலும் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்த விஜயகாந்த், வெளிநாடுகளுக்கு சென்றெல்லாம் சிகிச்சை பெற்றுக் கொண்டார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு விஜயகாந்த் இனிப்பு ஊட்டி விட்ட புகைப்படத்தை விஜய பிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தைக் கண்ட அவரது சினிமா ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் வேதனை அடைந்துள்ளனர்.
