'வாரிசு' படத்தின் ஆடியோ லான்ச் எங்கு? எப்போது நடைபெறுகிறது..! பரபரக்கும் ஏற்பாடுகள்.. வெளியான தகவல்!
விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'வாரிசு' திரைப்படத்தின் ஆடியோ லான்ச் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் வாசி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய் முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம், 'வாரிசு'. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரோடக்க்ஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வரும் நிலையில், அவ்வப்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, 'வாரிசு' படத்தின் ஆடியோ லான்ச்... வெளியிடப்பட உள்ள, தேதி மற்றும் இடம் குறித்த தகவல் வெளியே கசிந்துள்ளது.
அதன்படி, 'வாரிசு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, டிசம்பர் 24 ஆம் தேதி, நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கான பணிகளில் தற்போது படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சமீப காலமாகவே, தன்னுடைய படங்களின் ஆடியோ லான்ச் விழாவில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வரும், விஜய் 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் என்ன பேசுவார் என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. அண்மை காலமாக விஜய் அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களை சந்தித்து, விஜய் மக்கள் இயக்கம் செயல்பாடுகள் குறித்து விவாதித்து வருவதால் இந்த முறை இவருடைய பேச்சு தரமானதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
பிரபல நடிகரை திருமணம் செய்து கொண்ட விஜய் டிவி சீரியல் ஹீரோயின்..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!
விஜய் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், பிரகாஷ் ராஜ், சரத்குமார், சங்கீதா, சம்யுக்தா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.