பிரபல நடிகரை திருமணம் செய்து கொண்ட விஜய் டிவி சீரியல் ஹீரோயின்..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!
தெலுங்கு, கன்னடம், மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமான, சீரியல் நடிகை தேஜஸ்வினி கௌடா அவருடைய காதலரை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
நடிகை தேஜஸ்வினி கவுடா, 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெட்ரா 'வீணா பொன்னப்பாவுடன் பிலி ஹெந்தி' என்கிற சீரியல் மூலம் அறிமுகமானவர்.
இந்த சீரியலை தொடர்ந்து விஜய் டிவி தொலைக்காட்சி சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானார். விஜய் டிவி சீரியலில் நடிகர் வினோத் பாபுவுக்கு ஜோடியாக, இவர் நடித்த 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' சீரியல் இவரை தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.
விஜய் டிவி சீரியலை தொடர்ந்து, 'வித்யா நம்பர் 1 ' என்கிற சீரியலில் நடித்து வருகிறார். படிக்காத ஒரு பெண் அறிவு பூர்வமாக, படித்தவர்களையே மிஞ்சும் அளவிற்கு எப்படி நடைமுறை வாழ்க்கையில் நடந்து கொள்கிறார் என்பதை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.
பார்ப்பதற்கு, பக்கத்துக்கு வீட்டு பெண் போல் இருப்பது மட்டும் இன்றி, மிகவும் எதார்த்தமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்திய தேஜஸ்வினி கௌடா... நடிப்பை தாண்டி மாடலிங்கும் செய்து வந்தார்.
இந்நிலையில், இவர் சீரியல் நடிகர் அமர்தீப் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
இதை தொடர்ந்து தற்போது இவர்கள் இருவருக்கும் மிகவும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.
இந்நிலையில் இவர்களுடை திருமண புகைப்படங்களை அவர்கள் இன்ஸ்ட்டா ஸ்டேட்டஸில் வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு, ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.