பார்லிமெண்டுக்கு பறந்த தளபதியின் ட்விட்... எதிர்க்கட்சித் தலைவராக தேர்வான ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்து
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். இதன்மூலம் இனி நேரடியாக அரசியல் களத்தில் குதிக்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள விஜய், சினிமாவுக்கும் முழுக்கு போட உள்ளார். தளபதி 69 படத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக நடிகர் விஜய் திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகையால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாத விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், வருகிற 2026-ம் ஆண்டு நடக்க உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் தான் தங்களின் டார்கெட் என அறிவித்து உள்ளார். இதனால் 2026-ல் திமுக, அதிமுகவுக்கு போட்டியாக தமிழக வெற்றிக் கழகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... திடீரென சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட சன் டிவி... சட்டென புது பிசினஸ் தொடங்கிய எதிர்நீச்சல் சீரியல் நாயகி
நடிகர் விஜய் அரசியல் வருகையை உறுதி செய்த பின்னர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது மட்டுமின்றி, யாரேனும் தலைவர்களுக்கு பிறந்தநாள் வந்தால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் போட்டுள்ள வாழ்த்து பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இம்முறை காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியான ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் அண்மையில் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய், நாட்டுமக்களுக்கு சேவையாற்ற என்னுடையா வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு கவனம் பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்... இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மகளா இது? அழகில் சினிமா நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஜஸ்வதியின் க்யூட் போட்டோஸ்