- Home
- Gallery
- திடீரென சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட சன் டிவி... சட்டென புது பிசினஸ் தொடங்கிய எதிர்நீச்சல் சீரியல் நாயகி
திடீரென சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட சன் டிவி... சட்டென புது பிசினஸ் தொடங்கிய எதிர்நீச்சல் சீரியல் நாயகி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், அதில் நடித்த நடிகை ஒருவர் புது பிசினஸ் தொடங்கி உள்ளார்.

Ethirneechal serial
சன் டிவியில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டு சக்கைப்போடு போட்டு வந்த சீரியல் தான் எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்கிய இந்த சீரியலில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் ஆதி குணசேகரன் என்கிற டெரரான வில்லன் கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருந்தார். இந்த சீரியல் மிகப்பெரிய அளவு வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணமே மாரிமுத்துவின் தனித்துவமான நடிப்பு தான்.
Ethirneechal Serial Heroines
ஆணாதிக்கம் கொண்ட மனிதராக நடித்ததோடு மட்டுமின்றி, அவர் பேசிய டயலாக்குகள் மீம் டெம்பிளேட்டுகளாக மாறி வேறலெவலில் ட்ரெண்ட் ஆனது. இதன் காரணமாக 20 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் கிடைக்காத பெயரும், புகழும் அந்த ஒரே சீரியலின் மூலம் மாரிமுத்துவுக்கு கிடைத்தது. டிஆர்பி-யிலும் நம்பர் 1 இடத்தில் இருந்த எதிர்நீச்சல் சீரியல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பின் படிப்படியாக கடும் சரிவை சந்தித்தது.
இதையும் படியுங்கள்... Atlee : கமல்ஹாசனுடன் அடுத்த படமா? இந்தியன் 2 புரமோஷனில் அட்லீ சொன்ன சூசக தகவல்
Ethirneechal serial Actress
இதற்கு காரணம் மாரிமுத்துவின் மறைவு தான். அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததால், எதிர்நீச்சல் சீரியல் கடும் பின்னடைவை சந்தித்தது. பின்னர் அவருக்கு பதிலாக வேல ராமமூர்த்தியை அந்த கேரக்டரில் நடிக்க வைத்தும் வேலைக்கு ஆகவில்லை. இதனால் வேறு வழியின்றி எதிர்நீச்சல் சீரியலை கடந்த ஜூன் 8ந் தேதி உடன் முடிவுக்கு கொண்டு வந்தார் இயக்குனர் திருச்செல்வம். அந்த சீரியல் திடீரென முடிக்கப்பட்டது பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது.
Ethirneechal serial Actress haripriya Dance School
எதிர்நீச்சல் சீரியல் முடிவடைந்த கையோடு, அந்த சீரியலில் நந்தினி என்கிற கதாபாத்திரத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடித்திருந்த நடிகை ஹரிப்பிரியா புது பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார். பரதநாட்டிய டான்ஸரான நந்தினி, புதிதாக நடனப்பள்ளி ஒன்றை தொடங்கி உள்ளார். ‘காளிகல்பா’ என பெயரிடப்பட்டுள்ள அந்த பள்ளியில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் நடன வகுப்புகள் நடத்தப்படும் என அறிவித்துள்ள அவர், இதன்மூலம் தன்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகி உள்ளதாக கூறி இருக்கிறார். புதிதாக நடனப்பள்ளி தொடங்கியுள்ள ஹரிப்பிரியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... அனிதா விஜயகுமார் திருமணத்தில் முறை மாமனாக சீர்செய்த சத்யராஜ்! கணவரோடு வந்த ஸ்ரீதேவி! வெட்டிங் போட்டோஸ்!