- Home
- Gallery
- இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மகளா இது? அழகில் சினிமா நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஜஸ்வதியின் க்யூட் போட்டோஸ்
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மகளா இது? அழகில் சினிமா நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஜஸ்வதியின் க்யூட் போட்டோஸ்
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் இளைய மகள் ஜஸ்வதியின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன.

KS Ravikumar Daughter
நெபோடிசம் என்பது சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்று. பாலிவுட்டில் அது சர்ச்சையானதற்கு காரணம், அங்கு மற்ற நடிகர், நடிகைகளை விட வாரிசு நடிகர், நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தான். ஆனால் கோலிவுட்டில் நெபோடிசம் பெரிய பிரச்சனையாகவே இருந்ததில்லை.
jasvathi Ravikumar with her father
இங்கு வாரிசு நடிகராக இருந்தாலும் சரி, நடிகையாக இருந்தாலும் சரி, திறமை இருந்தால் தான் அவர்களால் அடுத்தடுத்த உயரங்களை தொட முடியும். அதற்கு முக்கிய எடுத்துக்காட்டு விஜய் மற்றும் சூர்யா. கோலிவுட்டில் சமீப காலமாக இயக்குனர்களின் மகள்கள் ஹீரோயினாக களமிறங்கி கலக்கி வருகின்றனர்.
jasvathi Ravikumar photos
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தற்போது கோலிவுட்டில் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார். விருமன், மாவீரன் என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்த அதிதி, ஹாட்ரிக் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... Aditi Shankar : மாஸ்டர் பட வில்லனுடன் ரொமான்ஸ் செய்ய ரெடியான அதிதி ஷங்கர்... கோலிவுட்டை கலக்க வரும் புது ஜோடி
jasvathi Ravikumar in saree
அதேபோல் தமிழில் மைனா, கும்கி, கயல் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் பிரபுசாலமனின் மகள் ஹசேல் ஷைனியும் விரைவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். தனது தந்தை பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரிக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.
jasvathi Ravikumar cute pics
இப்படி இயக்குனர்களின் மகள்கள் அடுத்தடுத்து களமிறங்கி வரும் நிலையில், அந்த வரிசையில் மற்றொரு இயக்குனரின் மகளும் விரைவில் கோலிவுட் பக்கம் தலைகாட்ட உள்ளார் போல தெரிகிறது. அவர் வேறுயாருமில்லை நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் இளைய மகள் ஜஸ்வதி தான்.
jasvathi Ravikumar Latest Photos
அழகில் சினிமா ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் ஜஸ்வதி, இன்ஸ்டாவில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். போற போக்கை பார்த்தால் அவரும் விரைவில் ஹீரோயினாக களமிறங்கிவிடுவார் போல தெரிகிறது.
இதையும் படியுங்கள்... திடீரென சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட சன் டிவி... சட்டென புது பிசினஸ் தொடங்கிய எதிர்நீச்சல் சீரியல் நாயகி