மறுபடியும் தப்பு செய்யும் ஆதி...பொறுக்கமுடியாமல் கன்னத்தில் அரை விட்ட ஜெசி...ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்
மீண்டும் ஆதி குறுக்கு வழியில் யோசிப்பதால் ஆத்திரமடைந்த ஜெசி, ஆதியின் கன்னத்தில் பளார் என்று அறைகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலில் ஒன்றுதான் ராஜா ராணி 2. இதன் முந்தைய சீசன் ராஜா ராணியின் மூலம் பிரபலமான ஆல்யா, சஞ்சீவ் தற்போது வெவ்வேறு சேனல்களில் பிஸியாக இருக்கின்றனர். தற்போது ராஜா ராணி 2 என்கிற பெயரில் ஒளிபரப்பாகி வரும் இதில் சித்து, ரியா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியல் பரபரப்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு..சமந்தாவிற்கு இனிமேல் பின்னணி குரல் கொடுக்க மாட்டேன்...அடம்பிடிக்கும் பிரபல பாடகி
கடந்த எபிசோடுகளில் நாயகன் சரவணனின் தம்பியாக வரும் ஆதி மாற்று மதத்தை சேர்ந்த ஜெசி என்கிற பெண்ணை காதலித்து ஏமாற்றி விடுகிறார். அந்தப் பெண் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஆதியிடம் தெரிவித்தும் அவர் மறுத்து விட அதை நிரூபிக்க சந்தியாவின் உதவியை நாடிய ஜெசி, ஆதிக்கு திருமணம் செய்து வைப்பதற்காக முடிவு செய்யப்பட்ட பெண் மூலமே அந்த விஷயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார். பின்னர் இதை அறிந்து கொண்ட ஆதியின் குடும்பத்தார் திருமணத்திற்கு சம்மதித்தாலும் அவரது தாய் மற்றும் பாட்டி இருவரும் வேறு மதப் பெண்ணை மருமகளாக கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு...5 மொழி குரல் கொடுத்த பிரபலங்களை அறிமுகம் செய்த...பொன்னியின் செல்வன் தயாரிப்பு நிறுவனம்...
ஆனால் சந்தியா விடாப்பிடியாக இருபதால் கடுப்பான சரவணனின் தாயார், பாட்டியின் சம்மதத்தை வாங்கினால் மட்டுமே நீ போலீசாக முடியும் என கூற சவாலை ஏற்று கொள்கிறார் சந்தியா. பின்னர் சந்தியா, சரவணன் இருவரும் ஜெஸியின் பெற்றோரை சந்தித்து மன்னிப்பு கேட்க முடிவு செய்கின்றனர். அதற்குள் ஆதி அவர்களது வீட்டிற்கு சென்று மேலும் பிரச்சனையை பெரிதாக்குகிறார். அங்கு செல்லும் ஆதி, ஜெசி தனது அடையாளங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வந்தால் மருமகளாக ஏற்றுக் கொள்வதாக தன் தாய் கண்டிப்பாக கூறிவிட்டார் என கூறுகிறார்.
மேலும் செய்திகளுக்கு...வாவ்...வாட்டர் கிராசிங்கில் மாஸ் காட்டும் அஜித்..வைரலாகும் சூப்பர் தூள் வீடியோ
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் தந்தை ஆதியை கடுமையாக சாடி வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், இந்த விஷயத்தை அறிந்த சரவணன் மற்றும் சந்தியா செய்வது அறியாது திகைத்து போய் இருக்கின்றனர். பின்னர் ஆதி ஜெசியை சந்தித்து என் குடும்பத்தார் திருமணத்திற்கு சம்மதிக்க போவதில்லை.எவ்வளவு சொன்னாலும் என் அம்மா மனதை மாற்றிக் கொள்ள மாட்டார் வேறு வழி இல்லை அதனால் நாம் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளலாம். பின்னர் நம்மை ஏற்றுக்கொள்வார்கள் என கூறுகிறார். மீண்டும் ஆதி குறுக்கு வழியில் யோசிப்பதால் ஆத்திரமடைந்த ஜெசி, ஆதியின் கன்னத்தில் பளார் என்று அறைகிறார். அதோடு இன்னும் பத்து முறை நீ இதை வந்து சொன்னாலும் நடக்காது போய் உன் அம்மாவின் மனதை மாற்றும் வேலையை பாரு என திட்டி அனுப்புகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோடு முடிவடைகிறது.