5 மொழி குரல் கொடுத்த பிரபலங்களை அறிமுகம் செய்த...பொன்னியின் செல்வன் தயாரிப்பு நிறுவனம்...
5 மொழிகளில் டப் பேசியது குறித்த தகவலை தந்த இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளது பொன்னியின் செல்வன் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ்
பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் ஒரு வழியாக திரையரங்குகளில் மிளிர உள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ் ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்களே குழுமியுள்ளன. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. சோழ மன்னர்களின் வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வனில் நம்ம ஊர் நாயகர்களின் கதாபாத்திரங்களை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த ஆவலுக்கு சிறு தீனி போடும் வகையில் இன்று மாலை வெளியாக உள்ளது பொன்னியின் செல்வனின் முன்னோட்டம். முன்னதாக இந்த படத்தில் இருந்து வெளியாகியிருந்த டீசர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. விக்ரம் மற்றும் கார்த்திக் தொடர்பான பாடல்களை படக்குழு வெளியிட்டு பிரமிக்க வைத்திருந்தது. அதோடு டீசர் வெளியீட்டு விழாவில் நாயகர்கள் பேசிய தமிழ் பண்பாடு குறித்த கருத்துக்களும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பையே பெற்றிருந்தன.
மேலும் செய்திகளுக்கு...வாவ்...வாட்டர் கிராசிங்கில் மாஸ் காட்டும் அஜித்..வைரலாகும் சூப்பர் தூள் வீடியோ
மேலும் செய்திகள்: பளபளக்கும்... மினுமினுக்கும் 'சொப்பன சுந்தரி' ஆக மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!
இந்நிலைகள் இன்று வெளியாக உள்ள ட்ரெய்லரை ஐந்து மொழிகளில் வெளியிடும் சிறப்பு விருந்தினர்கள் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி கமலஹாசன், அனில்கபூர், பிரித்விராஜ், ரானா டகுபதி, ஜெயந்த் கைக்கினி ஆகியோர் அவரவர் மொழிகளில் டப் பேசியது குறித்த தகவலை தந்த இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளது பொன்னியின் செல்வன் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ்.
மேலும் செய்திகள்: முட்டாள்களே... இதை கேள்விப்பட்டதே இல்லையா? சொந்த வீடு என விமர்சித்தவர்களை வெளுத்து வாங்கிய நடிகை குஷ்பு!