முட்டாள்களே... இதை கேள்விப்பட்டதே இல்லையா? சொந்த வீடு என விமர்சித்தவர்களை வெளுத்து வாங்கிய நடிகை குஷ்பு!
நடிகை குஷ்பு லண்டனில் புது வீடு வாங்கி விட்டதாக நெட்டிசன்கள் சிலர் விமர்சனம் செய்து வந்த நிலையில், நடிகை குஷ்பு கொந்தளிப்புடன் பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தற்போது சினிமா, அரசியல், திரைப்பட தயாரிப்பு, சீரியல், தொகுப்பாளர் என பன்முக திறமையால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். எவ்வளவு பிசியாக இருந்தாலும், அவ்வப்போது தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்ள, வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
மேலும் செய்திகள்: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு குடும்பத்துடன் திடீர் விசிட் அடித்த சாய் பல்லவி! ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு!
அந்த வகையில், நடிகை குஷ்புவும் அடிக்கடி செல்லும் இடங்களில் ஒன்று லண்டன். அடிக்கடி அங்கு செல்வதால், ஹோட்டல்களில் தங்குவதற்கு பதிலாக, தற்போது வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். தன்னுடைய லண்டன் வீட்டில் இருந்தபடி, சமீபத்தில் புகைப்படம் வெளியிட்ட குஷ்பு... புதிய வீட்டில் இருந்து முதல் காபி என பதிவு செய்திருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலர், குஷ்பு லண்டனில் சொந்த வீடு வாங்கி விட்டதாகவும், அவருக்கு இருக்கும் படத்திற்கு செல்லும் வெளிநாடுகளில் எல்லாம் சொந்த வீடு வாங்கலாம் என, விமர்சித்து கலாய்த்து வந்தனர்.
இது போன்ற கமெண்டால் கடுப்பான குஷ்பு, சமூக வலைத்தளத்தில் புதிய பதிவு ஒன்றை போட்டு தன்னுடைய பதிலடியை கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... "பொறாமை கொண்ட பல தோல்வியடைந்தவர்களை நான் சுற்றி பார்க்கிறேன். நான் லண்டனில் புதிய வீடு என்று சொன்னால், அது சொந்த வீடு என்று தான் அர்த்தமா? முட்டாள்களே நீங்கள் வாடகை வீடு பற்றி கேள்வி பட்டதே இல்லையா ?? ஒரு பெண் சுதந்திரமாகவும், வெற்றிகரமான பெண்மணியாகவும் இருந்தால் சிலருக்கு பார்ப்பதற்கே வலிக்கும் என்பதை நான் அறிகிறேன். எனவே நான் இங்கு தங்கியிருக்கும் போது, தூக்கமில்லாத இரவுகளை அனுபவியுங்கள் என குத்தலாக ஒரு பதிவை போட்டுள்ளார்.
மேலும் செய்திகள்: வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு டாட்டா ! புதிய சேனலில்... காம்பேக் கொடுக்க தயாரான ஆல்யா மானசா! வெளியான தகவல்!
இவர் போட்டுள்ள இந்த பதிவு சொந்த வீடு வாங்கியதாக விமர்சித்த நெட்டிசன்களுக்கு மட்டும் தான் இப்படி ஒரு பதிவா? அல்லது மறைமுகமாக யாரையும் தாக்கி இந்த பதிவை போட்டுள்ளாரா? என்கிற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.