வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு டாட்டா ! புதிய சேனலில்... காம்பேக் கொடுக்க தயாரான ஆல்யா மானசா! வெளியான தகவல்!
விஜய் டிவி 'ராஜா ராணி' சீரியல் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஆல்யா மானசா, வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு டாட்டா சொல்லி, கழட்டி விட்டுட்டு புதிய சேனலில் சீரியல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவி சீரியலில், ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடரில், செம்பா என்கிற வேலைக்கார பெண் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஆல்யா மானசா. இந்த சீரியலில் இவருக்கு ரீல் ஜோடியாக நடித்த சஞ்சீவ் - ஆல்யா இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2019-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆனதும் ஆல்யா கர்ப்பமானதால் சிறிது காலம் சீரியலில் இருந்து விலகியே இருந்தார்.
alya
இந்த தம்பதிக்கு ஐலா எகிற மகள் பிறந்த நிலையில், மகள் சற்று வளர்ந்த பின்னர்... மீண்டும் ஆல்யா மானசா 'ராஜா ராணி 2' என்ற சீரியலில், சித்துவிற்கு ஜோடியாக, நடிக்க கமிட் ஆனார். ஆனால். இடையில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக ஆனதால், பாதியிலேயே விலக நேர்ந்தது. பின்னர் இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் ஆல்யா.
மேலும் செய்திகள்: பட்டு சேலை கட்டிய அழகு சிலையாய்.. முகம் காட்டாமல்.. பின்னழகை வளையவளைய காட்டிய ரம்யா பாண்டியன்.. போட்டோஸ்!
கடந்த மார்ச் மாதம் ஆல்யா - சஞ்சீவ் தம்பதிக்கு குழந்தை பிறந்த நிலையில், மீண்டும் நடிக்க தயாராகி வருவதாக சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் மூலம் பேசிய போது, ஆல்யா தெரிவித்துள்ளார்.
அவர் எந்த சீரியலில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் தற்போது வரை வெளியாகாத நிலையில், அவர் கம்பேக் கொடுக்க உள்ளது விஜய் டிவி இல்லை என்பதும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சீரியலில் தான் ஆல்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: நயன்தாரா, அஜித், ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர் - நடிகைகள் உதவியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா
குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை கூடிய இவர், தற்போது கடின உடல் பயிற்சி மற்றும் டயட் போன்றவற்றின் மூலம் எடையை குறைத்து, பழைய லுக்கிற்கு வர முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய் டிவி மூலம் பிரபலமான சஞ்சீவ் தற்போது, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும்.. கயல் தொடரில் நாயகனாக நடித்து வரும் நிலையில், விரைவில் ஆல்யா-வும் சன் டிவி தொடரில் தான் நடிக்க உள்ளாராம். எனவே விரைவில் இது குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: மூன்றாவது முறையாக காதலியை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்த குக் வித் கோமாளி புகழ்! வைரலாகும் புகைப்படம்!